Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் சந்தோஷம் மழையாக கொட்டப்போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க...!
December Month Horoscope 2023: 2023- ஆம் ஆண்டின் கடைசி மாதமும் வந்துவிட்டது. கண்ணை மூடி திறப்பதற்குள் 2023- ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. ஒவ்வொரு புதிய மாதமும் ஒரு புதிய வாய்ப்புகளையும், மாற்றங்களையும் கொண்டு வரும். அதேசமயம் சில சவால்களையும், ஆபத்துகளையும் கொண்டுவரும்.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நமக்கு கிடைக்கபோவது வாய்ப்புகளா அல்லது ஆபத்துக்களா என்பது ஒருவர் பிறந்த ராசியின் கிரக நிலைகளை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி ஆண்டின் கடைசி மாதத்தில் கிரக நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கப்போகிறது. அதனால் அவர்கள் பிரகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு டிசமபர் சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றங்களைச் செயல்படுத்துவது பற்றி உங்களுக்கு யோசனைகள் எழலாம். வேலையில் மாற்றங்களைச் செய்வதும் உங்களுக்கு பெரிதும் உதவும்.
வியாபாரத்தில், பார்ட்னர்களின் உதவியினாலும், குறிப்பிடத்தக்க திட்டத்தில் சேரும் வாய்ப்பினாலும் லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு இலாபகரமானதாக அமையும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையலாம்.
கடகம்
இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் நிலவும் மோதல்கள் தீர்க்கப்படுவதால் குடும்பம் சூழல் மற்றும் உங்கள் குடும்பத்துடனான உங்கள் உறவுகள் வலுவடையும். இந்த மாதம் உங்களின் நிலப்பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த மாதம், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு அற்புதமான நேரத்தை செலவிடப் போகிறீர்கள், நீங்கள் பதவி உயர்வு பெறலாம், மேலும் உங்களின் சிறப்பான சில வேலைகள் முடிவடையும். திருமணம் அல்லது பிற குடும்ப நிகழ்வு போன்ற ஒரு பெரிய நிகழ்வு வீட்டில் திட்டமிடப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
கன்னி
உங்கள் ராசிக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் உற்சாகத்தால் நிறைந்திருக்கும். இந்த மாதம் நீங்கள் நிறைய மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். இந்த மாதம் உங்களின் பழைய திட்டங்களில் சிலவற்றை செய்து முடிப்பீர்கள்.
இந்த மாதம் குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சில பழைய வேலைகளை முடித்து இந்த மாதம் நிம்மதி அடைவீர்கள். உங்கள் எண்ணங்கள் திருப்திகரமாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் சிறுசிறு உடல்நலப் பிரச்சினைகள் தோன்றக்கூடும். பங்குச் சந்தை ரியல் எஸ்டேட் போன்றவற்றில் இந்த மாதம் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
கும்பம்
உங்கள் ராசிக்கு இந்த மாதம் பல நன்மைகள் உண்டாகும். பல நாட்களாக இருந்து வந்த உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இந்த மாதம், நீங்கள் சில புதிய திட்டங்களையும் தொடங்கலாம். இந்த மாதம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளுக்காக, நீங்கள் நிறைய பணம் முதலீடு செய்யலாம்.
இந்த மாதம் வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை தங்களின் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் ஒரு புதிய முயற்சியில் இந்த மாதம் கணிசமான அளவு பணத்தை முதலீடு செய்யலாம். அது உங்களுக்கு இலாபகரமானதாக அமையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
