Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
December Horoscope 2023: டிசம்பர் மாசம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகுது...
December 2023 Monthly Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.
உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் டிசம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என டிசம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிப்படி 2023 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தின் தொடக்கம் சற்று மந்தமாகவே இருக்கும். வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். வேலையில் சற்று ஆர்வம் குறையும். குடும்ப பிரச்சனைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். கவலைகள் அனைத்தையும் மறந்து வேலையில் கவனம் செலுத்துவீர்கள்.
பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்குட்ம. வணிகர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று விழிப்போடு இருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதமானது ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். அதிக வேலைப்பளு காரணமாக உங்களுக்காக போதுமான நேரத்தை உங்களால் பெற முடியாது. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் நீங்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். முக்கியமான வேலைகள் தடைபடலாம். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
மாதத்தின் நடுப்பகுதியில் திடீர் உடல்நலக் குறைவால் உங்களின் சில முக்கியமான பணிகள் முழுமையடையாமல் இருக்கும். நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் நடத்தையை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பொறுமையை இழக்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதமானது வேலையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். இருப்பிகும் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உடல்நலம் சற்று பாதிக்கப்படும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் முழுமையாக கவனித்துக்கொள்வது உங்களுக்கு நல்லது.
மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானத்திலும் உயர்வு ஏற்படும். வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, வாழ்க்கை துணையிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் நீங்கள் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. குறிப்பாக நீங்கள் சண்டைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம். மேலும் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். பரம்பரை சொத்து தொடர்பான வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், முடிவு உங்களுக்கு சாதமாக இருக்காது. இருப்பினும் பொறுமையாக இருக்க வேண்டும்.
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பணியிடத்தில், உங்கள் வேலையைத் தவிர, உங்களைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் சிலர் உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சராசரியாக இருக்கும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். மாத இறுதியில் புதிய வருமானம் கிடைக்கும். ஆரோக்கியதில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கார்களே! டிசம்பர் மாதத்தில் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணத்தில் ஏதேனும் தடைகள் இருந்தால், அது இம்மாதத்தில் நீங்கும். சிலருக்கு மாதத்தின் நடுப்பகுதியில் நல்ல திருமண வரன் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
கடினமாக உழைப்பவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்களுக்கு இம்மாதம் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்க விரும்பினால், இந்த மாதத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் கவனமாக சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தற்போதைய வேலையில் திருப்தியில்லாமல் இருந்தால், இந்த மாதத்தில் உங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அவசரத்தை தவிர்ப்பது நல்லது.
வணிகர்கள் அதிக லாபத்தைப் பெற குறுக்குவழியைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்குவீர்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் இம்மாதம் மிகவும் மறக்கமுடியாததாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் இல்லையெனில் உங்கள் உறவு முறிந்துவிடும். கவனக்குறைவால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! டிசம்பர் மாதமானது சிறப்பாக இருக்காது. மாதத்தின் தொடக்கத்தில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இப்படியே கவனக்குறைவாகத் தொடர்ந்தால், எதிர்காலத்தில் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உணர்ச்சி ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள். சிலர் உங்கள் மரியாதையை புண்படுத்தலாம். கோபத்திலும் அவசரத்திலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் நல்லது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
வேலையைப் பொறுத்தவரை, மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் கடின உழைப்பால் நல்ல வெற்றியை அடைவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க, உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தின் தொடக்கம் நன்றாக இருக்காது. தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்காததால் பெரிய ஏமாற்றமடைவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு மோசமடையும். வியாபாரிகள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எதிரிகளிடம் இம்மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்களின் சில முக்கியமான வேலைகள் இம்மாதத்தில் தடைபடலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் பரபரப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதி ரீதியாக அதிர்ஷ்டமானதாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் செல்வாக்குமிக்க நபரின் வழிகாட்டுதல்களைப் பெற்று, பல வெற்றிகளைக் குவிப்பீர்கள். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும்.
தொழிலதிபர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள சில வேலைகள் மாதத்தின் நடுப்பகுதியில் முடிவடையும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த மாதம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். இம்மாதத்தில் நாள்பட்ட நோய்கள் உங்களை தொந்தரவு செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தின் தொடக்கம் பணிபுரிபவர்களுக்கு பரபரப்பாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பை உங்கள் உயர் அதிகாரிகள் கவனிக்கலாம். அரசு வேலை செய்தால் வருமானம் கூடும். வணிகர்கள் பெரிய ஆர்டரைப் பெறலாம். இருப்பினும், எந்தவொரு புதிய பொறுப்பையும் ஏற்கும் முன் உங்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பெயர் பாழாகும்.
பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக நடப்பதைத் தவிர்க்கவும். திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் சிறு பிரச்சனைகளை கூட அலட்சியமாக எடுக்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் திடீரென்று பெரிய செலவுகளை சந்திப்பீர்கள். இதனால் உங்கள் பட்ஜெட் பாழாகும். இந்த சூழ்நிலையில் உங்கள் கவலை அதிகரிக்கும். தொழிலதிபராக இருந்தால், இந்த மாதம் சில முதலீட்டு வாய்ப்புகளைப் பெறலாம். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள், நல்ல வெற்றியைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் ஏற்றஇறக்கம் நிறைந்ததாக இருக்கும்.
பணியிடத்தில் கடினமாக உழைத்தும், அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்றால், வேலையை மாற்ற இது சரியான நேரம். குடும்ப வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் நல்லிணக்கம் மோசமடையக்கூடும். தேவையற்ற ஈகோ மற்றும் மோதல் உங்கள் உறவுகளை கெடுக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் பணியிடத்தில் உங்கள் வேலையுடன் நடத்தையையும் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உங்கள் இமேஜ் பாழாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதம் நல்ல வேலை கிடைக்கும். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் மாத தொடக்கத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். உங்கள் பணம் எங்காவது சிக்கும் வாய்ப்புள்ளது.
மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். இந்தக் காலக்கட்டத்தில் உங்களின் பிரச்சனைகள் தீர்ந்து வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். மாத இறுதியில் குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இம்மாதத்தில் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications











