Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
டிசம்பர் மாசம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கப்போகுது..
December 2023 Monthly Career Horoscope In Tamil: 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால், ஒவ்வொரு மாதமும் தொழில், காதல், நிதி போன்றவற்றில் மாற்றங்களைக் காண நேரிடும்.
அதுவும் டிசம்பர் மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றங்களுடன், ஏராளமான யோகங்களும் உருவாகின்றன. இதனால் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்களைக் காணலாம்.

முக்கியமாக தொழில் ரீதியாக பல மாற்றங்களை காணக்கூடும். அதில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் நஷ்டத்தையும், பல தோல்விகளையும் காணலாம். இப்போது 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக சற்று சிரமமாகவே இருக்கும். முக்கியமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். வேலையில் வெற்றி பெற நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக இருப்பார்கள். இதன் விளைவாகவே அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மொத்தத்தில் வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் உங்கள் தொழிலைப் பற்றி கவலைப்படக்கூடும். உங்களை திறமையைக் கொண்டு எந்த ஒரு முடிவையும் இம்மாதத்தில் எடுக்க முடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பலர் அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! வேலையை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நடத்தையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியடைவர். சிலர் இதன் விளைவாக பதவி உயர்வைப் பெறலாம். மொத்தத்தில் இந்த மாதத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது சற்று பிஸியாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இருப்பினும் மனத் தளராமல் தொடர்ந்து முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறது. அப்படி சோர்ந்து போகாமல் வேலையில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆனால் கடின உழைப்பிற்கான பலன் உடனே கிடைக்காது. எவ்வளவு முயற்சித்தாலும், உடனே அதன் நற்பலனைப் பெற முடியாது. இருந்தாலும் தொடர்ந்து கடின உழைப்பை மனம் தளராமல் தொடர்ந்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக டிசம்பர் மாதமானது நன்றாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை இன்னும் சற்று காலம் தள்ளிப் போட அறிவுறுத்தப்படுகிறது. இந்த மாதத்தில் சற்று புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். விரும்பிய வேலையைப் பெற வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இந்த மாதம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த மாதத்தில் அப்பிரச்சனைகள் நீங்கி, நல்ல பலனைப் பெறக்கூடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் எடுக்கும் சில தவறான முடிவகள் உங்களின் கடின உழைப்பை அழித்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறை எண்ணங்களுடன் வேலையில் ஈடுபடுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். ஆனால் வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவதன் மூலம், பணியிடத்தில் வெற்றியைக் காணலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
டிசம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்னும் சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது வெற்றிகள் நிறைந்ததாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் கொடுக்கும் வேலையை எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவால் பல வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications