Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Unlucky Zodiac Signs In December 2023 In Tamil: 2023 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. இதனால் இந்த டிசம்பர் மாதமானது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
குறிப்பாக டிசம்பர் மாதத்தில் புதன், சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதோடு, குரு பகவான் டிசம்பர் மாதத்தின் இறுதியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கலாம். இப்போது டிசம்பர் மாத கிரக பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மோசமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது சற்று மோசமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் முயற்சிகளில் தோல்விகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கலவையான முடிவுகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் அதிகரிக்கும். இதனால் குடும்ப சூழல் சற்று மோசமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் சவாலான சூழ்நிலையை சந்திப்பார்கள். நிறைய சிரமங்களை இம்மாதத்தில் சந்திக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். முக்கியமாக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்களானது பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். வேலை செய்பவர்களின் செயல்திறன் இம்மாதத்தில் குறையும். வேலையில் உங்களால் முழு கவனத்தை செலுத்த முடியாது. வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் வேலையில் உங்களுக்கு வெறுப்பு ஏற்படும். இம்மாதத்தில் எந்நேரமும் பரபரப்பாகவே இருக்க வேண்டியிருக்கும். சுற்றி இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். முக்கியமாக இம்மாதத்தில் போடப்படும் திட்டங்கள் தோல்வியடையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வேலையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை அதிகமாக இருக்கும். இம்மாதத்தில் நிறைய தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது. முக்கியாமக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications