Latest Updates
-
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா?
இந்த 10 வார்த்தைகளை ஏர்போர்ட்டில் இருக்கும்போது தெரியாம கூட பேசாதீங்க... இல்லனா உடனே கைது பண்ணிருவாங்க...!
விமான பயணங்கள் உலகை மிகவும் சிறியதாக மாற்றியுள்ளன. விமானங்கள் மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சில மணி நேரங்களில் சென்று விட முடிகிறது. வசதிகள் வரும் போது அவற்றுடன் சில ஆபத்துகளும், கட்டுப்பாடுகளும் சேர்ந்தே வரும். விமான நிலையங்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து செல்வதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும், அங்கு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஏன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கூட உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. பயணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், குறிப்பாக இன்றைய உயர் பாதுகாப்பு உள்ள சூழலில் இது மிகவும் அவசியம்.

நீங்கள் வேலை அல்லது வணிகம் தொடர்பாகவோ, ஓய்வுக்காகவோ அல்லது குடும்ப பயணத்திற்காகவோ விமான நிலையம் செல்லும்போதோ அல்லது விமானத்தில் இருக்கும் போதோ தவறான இடத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது விமான தாமதம் தாமதமாக புறப்படுவது, தடுப்புக்காவல் அல்லது உங்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
சில வார்த்தைகளை கூறி கிண்டல் செய்வது அல்லது எதார்த்தமாக குறிப்பிடுவது பாதிப்பில்லாதது என்று பலர் நினைக்கலாம், ஆனால் சில சொற்கள் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான ஊழியர்களால் எச்சரிக்கையாகக் கருதப்படுகின்றன. இந்த வார்த்தைகளின் நோக்கம் நகைச்சுவையாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருந்தாலும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏர்போர்ட் பாதுகாப்பு குழுக்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஏர்போர்ட்டில் உங்களை ஆபத்தில் சிக்க வைக்கும் வார்த்தைகள்
விமான நிலையத்திலோ அல்லது விமானத்திலோ, நகைச்சுவையாகக் கூடப் பயன்படுத்தக்கூடாத சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் குறிப்பிட்ட பட்டியல் உள்ளது, அவை என்னவெனில்,
- Bomb - வெடிகுண்டு
- Gun - துப்பாக்கி
- Knife - கத்தி
- Terrorist - தீவிரவாதி
- Hijack - கடத்தல்
- Explosives - வெடிபொருள்
- Accident - விபத்து
- Biological weapons - உயிரியல் ஆயுதங்கள்
- Smuggling - கடத்தல்
- Drugs - போதைப்பொருள்
நண்பர்களிடம் விளையாட்டாக ' எனது பேக்கில் வெடிகுண்டு இருக்கிறது' என்றோ ' நான் ஒரு தீவிரவாதி' என்றோ சொல்வது கூட கடுமையான எதிர்வினையைத் தூண்டும். பாதுகாப்புப் பணியாளர்கள் இந்தக் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர், இது கைது செய்யப்படுவது, விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவது அல்லது மோசமாக குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது போன்ற தீவிர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் . இதுபோன்ற நகைச்சுவைகள் விமான தாமதங்களுக்கும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சட்ட சிக்கலுக்கும் வழிவகுத்த பல நிஜ வாழ்க்கை வழக்குகள் உள்ளன.
குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவை
விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் சில வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். அதனால்தான் அவர்களுக்கு முன்கூட்டியே அவற்றை சொல்லி கொடுக்க வேண்டியது முக்கியம். எந்த வார்த்தைகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள், மேலும் இந்த விஷயங்களைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவது ஏன் சரியல்ல என்பதை சொல்லி கொடுங்கள்.
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
விமான நிலையத்தில் உங்கள் வார்த்தைகளைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு உங்கள் பொருட்களையும் சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான அல்லது ஆபத்தானதாகக் கருதக்கூடிய எந்த பொருட்களையும் நீங்கள் எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பேக்கேஜில் உள்ள பொருட்களின் பாதுகாப்பு விதி குறித்து உங்களுக்கு எப்போதாவது உறுதியாகத் தெரியவில்லை என்றால், அதைப்பற்றி தெளிவுபடுத்திக் கொள்ள விமான நிலைய உதவி மையம் அல்லது விமான ஊழியர்களைத் தொடர்பு கொள்ளவும்.



Click it and Unblock the Notifications

