Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி அதற்கு வரியும் வசூலிக்கும் உலகின் வினோதமான நாடுகள்..எந்தெந்த நாடுகள் தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே விபச்சாரம் இருந்து வருகிறது. இந்தியாவில் சிக்க இடங்களில் விபச்சாரம் சட்டவிரோதமாகக் கருதப்படாவிட்டாலும், ஒட்டுமொத்த இந்தியாவைப் பொறுத்தவரை அது தடைசெய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமானதாகவும் உள்ளது. ஆனால் உலகில் பல நாடுகள் விபச்சாரத்தை சட்டபூர்வமான தொழிலாக அங்கீகரித்து அதற்கு வரியும் வசூலிக்கின்றன.
உலகில் உள்ள மொத்தம் 195 நாடுகளில் 77 நாடுகள் விபச்சாரத்தை முழுமையாக சட்டப்பூர்வமாக்கியுள்ளன, 11 நாடுகள் விபச்சாரத்தை கடுமையான சட்டங்களுடன் அதை அனுமதிக்கின்றன. அமெரிக்கா போன்ற சில இடங்கள், சில விதிவிலக்குகளுடன் அதை அங்கீகரித்துள்ளன. இந்த பதிவில் எந்தெந்த நாடுகள் விபச்சாரத்தை சட்டரீதியாக அனுமதித்துள்ளன என்று தெரிந்து கொள்ளலாம்.

டென்மார்க்
டென்மார்க்கில் 1999 ஆம் ஆண்டு பாலியல் தொழில் சட்ட விரோதமற்றது என்று அறிவிக்கப்பட்டது. இது சட்டபூர்வமாக்கப்பட காரணம் அது வெளிப்படையாக நடந்தால், அதனை கண்காணிப்பது எளிதாக இருக்கும் என்று கருதப்பட்டது, சட்டவிரோத தொழிலை விட சட்டப்பூர்வ தொழிலை கண்காணிப்பது எப்போதும் எளிதானது. இருப்பினும், பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்துதல், கடத்தல் மற்றும் சிறார்களை வற்புறுத்துதல் போன்ற மூன்றாம் தரப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமாகவே உள்ளன.
பின்லாந்து
பின்லாந்தில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது, ஆனால் பொது இடங்களில் பாலியல் தொழிலை நடத்துவது சட்டவிரோதமானது, அதே போல் கடத்தி கொண்டு வரப்பட்டவர்களை வாங்குவதும், பாலியல் தொழில் ஈடுபடுத்துவதும் சட்டவிரோதமானது. 1990 களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது பாலியல் தொழில் அதிகளவில் தொடங்கியது. தற்போது பின்லாந்தில் மற்ற தொழில்களைப் போலவே, "சிவப்பு விளக்கு மாவட்டங்கள்" அனைத்தும் இணையம் மற்றும் தனிப்பட்ட விளம்பரங்கள் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது.
கோஸ்டா ரிகா
கோஸ்டா ரிகாவில் பாலியல் தொழில் முற்றிலும் சட்டப்பூர்வமானது. உண்மையில், இங்கு ஒரு சாதாரண தொழிலாகும், குறிப்பாக பிரபலமான சுற்றுலா தலங்களில் இது மிகவும் சகஜமானதாக உள்ளது. பாலியல் தொழில் சட்டபூர்வமானதாக இருந்தாலும், சிறார்களை வைத்து பாலியல் தொழில் செய்வது, கடத்துவது போன்றவை தடைசெய்யப்பட்டதாக உள்ளது. ஆனால் பாலியல் நோக்கங்களுக்காக கடத்தப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோஸ்டா ரிகா தலைமையிடமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அர்ஜென்டினா
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அர்ஜென்டினாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது. இருப்பினும், விபச்சாரத்தை ஊக்குவிப்பது மற்றும் சுரண்டுவது இங்கு பிரச்சினையாக உள்ளது, குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளை நாட்டிற்குள் விபச்சாரத்திற்காக கடத்துவது ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. மனித கடத்தல், பாலியல் விடுதி வைத்திருப்பது அல்லது ஒருவரை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது.
கனடா
பாலியல் தொழிலுக்கு எதிராக கனடாவில் எந்தச் சட்டமும் இல்லை, ஆனால் பாலியல் விடுதியை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பாலியல் தொழில் குறித்து சந்தைப்படுத்துவது அல்லது பொதுவெளியில் தொடர்புகொள்வதும் சட்டவிரோதமானது.
பெல்ஜியம்
பெல்ஜியம் பாலியல் தொழிலை அனுமதிக்கிறது மற்றும் விபச்சார விடுதிகளைத் தடை செய்கிறது என்றாலும், பல பாலியல் விடுதிகள் இன்னும் எந்த விளைவுகளும் இல்லாமல் வெளிப்படையாக இயக்கப்படுகின்றன. ஆனால் அதிகாரிகள் சிவப்பு விளக்கு மாவட்டங்களை காவல் கண்காணிப்பதில் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
பிரான்ஸ்
பிரான்சில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது ஆனால் விபச்சார விடுதிகள், விளம்பரங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டது. பிரெஞ்சு அரசாங்கம் 2003 இல் ஒரு மசோதாவை நிறைவேற்றியது, அதன்படி "மறைமுக விளம்பரம்" கூட சட்டவிரோதமானது. இந்த புதிய சட்டம் ஒருவரின் உடை அல்லது தோரணையைப் பயன்படுத்துவதை "விபச்சாரத்தை விளம்பரப்படுத்தும்" முறையாக வகைப்படுத்தியது. நாட்டில் உள்ள 18,000 விபச்சாரிகளில் யாராவது "அமைதியைக் குலைப்பதாகக்" குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது $7,500 வரை அபராதம் விதிக்கப்பட்டனர். இதனால் 500 பெண்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனி
ஜெர்மனியில் சுமார் 400,000 பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர், அவர்களின் வருவாய் மிகப்பெரிய நிறுவனங்களை விட அதிகமாகும். ஜெர்மனியில் பாலியல் தொழில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு பில்லியன் யூரோக்களை ஈட்டுகிறது மற்றும் சுமார் 1.2 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. நிச்சயமாக, அரசாங்கம் இந்த வருவாயில் ஒரு பகுதியை சமூக நலன்களுக்கு பங்களிக்க பயன்படுத்துகிறது மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், சுகாதார காப்பீடு, வழக்கமான 40 மணி நேர வேலை வாரம் மற்றும் பாலியல் தொழிலாளர் சங்கங்களில் சேர வாய்ப்புகளும் உள்ளது.
கிரீஸ்
கிமு ஆறாம் நூற்றாண்டில் உயர் ரக பாலியல் தொழிலாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் பண்டைய கிரேக்கர்கள்தான். இப்போதும் கிரேக்கத்தில், 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், உள்ளூர் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டவராகவும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அட்டை புதுப்பிக்கப்படும் மருத்துவ அட்டை வைத்திருந்தால் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடலாம். இங்கு விபச்சார விடுதிகள் சட்டப்பூர்வமானவை, ஆனால் கிரேக்கத்தில் உள்ள 525 விபச்சார விடுதிகளில் பத்து மட்டுமே உண்மையில் உரிமம் பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்து
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ள பல நாடுகளைப் போலவே, சுவிட்சர்லாந்திலும் பாலியல் தொழிலாளர்கள் அரசாங்கத்தில் பதிவுசெய்து வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தெரு விபச்சாரம் இங்கு சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது, ஆனால் விபச்சார விடுதிகள் சட்டப்பூர்வமானவை, மேலும் முக்கிய நகரங்களில் சிவப்பு விளக்கு மாவட்டங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்து
அக்டோபர் 2000 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நெதர்லாந்தில் பாலியல் தொழில் அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். விபச்சார விடுதி உரிமை சட்டப்பூர்வமானது, ஆனால் அவர்கள் பாலியல் தொழிலாளர்களை போலவே, விடுதிகளும் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு வரி செலுத்த வேண்டும்.
மெக்சிகோ
மெக்ஸிகோவில் பாலியல் தொழில் குற்றமற்றது, மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாலியல் தொழிலாளர்களும் பதிவு செய்யப்படுவதையும், அடிக்கடி சுகாதார பரிசோதனைகள் பெறுவதையும் உறுதி செய்வதற்காக மாநில அளவில் இது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்கள் வேலை செய்யும் போது தங்கள் சுகாதார அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும், மேலும் அவர்களின் நகரத்தின் சிவப்பு விளக்கு மாவட்டத்தில் தங்க வேண்டும். மெக்ஸிகோவின் முப்பத்தொரு மாநிலங்களில் பதின்மூன்று மாநிலங்கள் விபச்சாரத்தை தீவிரமாக ஒழுங்குபடுத்துகின்றன.



Click it and Unblock the Notifications












