Latest Updates
-
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
2100-ல் உலகின் மக்கள்தொகை எவ்வளவு இருக்கும் தெரியுமா? இந்த நாடுதான் முதலிடத்தில் இருக்குமாம்...ஷாக் ஆகாதீங்க!
உலகில் தங்கம் விலைப்போலவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ஒரு விஷயமென்றால் அது மக்கள்தொகைதான். அரை நூற்றாண்டுக்கு முன் 2 பில்லையானக உலகின் மக்கள்தொகை சமீபத்திய ஆய்வின் படி 8 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கணக்கிடப்பட்டதை விட வேகமான வளர்ச்சியாகும். 2100-ல் இந்த எண்ணிக்கை 10.5 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள்தொகை மாற்றங்கள் பல்வேறு கணிப்புகளை வெளிப்படுத்துகின்றன. சில நாடுகள் கணிசமான வளர்ச்சியை காணும் போது, மற்ற நாடுகள் மக்கள்தொகையில் கடுமையான வீழ்ச்சியைக் காணலாம். இந்த மாற்றங்கள் பிறப்பு விகிதங்கள், மக்களின் ஆயுட்காலம் மற்றும் இடம்பெயர்வு போக்குகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன, இவை அனைத்தும் எதிர்கால உலக மக்கள்தொகையை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. இந்தப் பட்டியலில் UN Population Division கணிக்கப்பட்டுள்ளபடி, 2100 இல் அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா மற்றும் சீனா
2023- ல் சீனாவை விஞ்சி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியது. இந்தியாவின் மக்கள்தொகை வரப்போகும் காலங்களிலும் தொடர்ந்து வளரும் என்று ஐநா மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் சீனாவின் மக்கள்தொகை சமீபத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியது மற்றும் 2022 முதல் சரியத் தொடங்கியுள்ளது. 2100 ஆம் ஆண்டில், 1,533 மில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். அதேசமயம் சீனாவின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து 771 மில்லியனாக இருக்கும்.
நைஜீரியா
நைஜீரியாவின் 2100-ல் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை சுமார் 546 மில்லியன் ஆகும், இது உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. முக்கிய நாடுகளுக்கான அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஆப்பிரிக்காவில் உள்ளது.
பாகிஸ்தான்
2100 ஆம் ஆண்டில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் தோன்றிய மூன்றாவதாக நமது அண்டை நாடான பாகிஸ்தான் இருக்கும். 2100-ல் பாகிஸ்தானில் 487 மில்லியன் மக்கள் தொகையுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காங்கோ
2024 நிலவரப்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசின் மக்கள் தொகை 110 மில்லியனாக உள்ளது, இது உலக மக்கள்தொகையில் வெறும் 1.34% ஆகும். ஆச்சர்யமளிக்கும் விதமாக மக்கள்தொகை 2050 இல் 110% அதிகரித்து 218 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2100 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 431 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா
ஜூலை 2024 நிலவரப்படி, 336 மில்லியன் மக்கள்தொகையுடன், உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கருவுறுதல் விகிதம் குறைவாக இருந்தாலும் அமெரிக்காவில் தொடர்ந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2100-ல், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அவர்களின் மக்கள் தொகையில் அதிக வளர்ச்சி இருக்காது. 2100-ல் அமெரிக்கா 394 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியா
284 மில்லியன் மக்கள்தொகையுடன் உலகின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தோனேஷியா உள்ளது, ஆனால் இந்த எண்ணிக்கையில் 2100-ல் பெரிய மாற்றம் இருக்காது. ஐநா மக்கள்தொகை பிரிவின் கணிப்புகளின்படி, நாட்டின் மக்கள்தொகை 2100-ல் 297 மில்லியனாக இருக்கும்.
எத்தியோப்பியா
தற்போது 133 மில்லியன் மக்கள்தொகை கொண்ட எத்தியோப்பியா, மக்கள்தொகையில் கடுமையான அதிகரிப்பைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2100 ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவின் மக்கள்தொகை 323 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தான்சானியா
தான்சானியாவின் மக்கள்தொகை 2100 ஆம் ஆண்டளவில் 61.7 மில்லியனிலிருந்து 244 மில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2100-ல் இது உலகின் 9 வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், ஆப்பிரிக்காவில் 4 வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் மாறும்.
எகிப்து
உலகின் முக்கியமான சுற்றுலாத் தலமாக இருக்கும் எகிப்தின் மக்கள்தொகை 2100 இல் 225 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போதைய எண்ணிக்கையிலிருந்து கிட்டதட்ட 120% அதிகமாகும்.



Click it and Unblock the Notifications