Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சிம்ம ராசியில் உருவாகியுள்ள சதுர்கிரக யோகம்: இந்த 4 ராசிக்கு சூப்பரா இருக்கும்...
Chaturgrahi Yoga In Leo On August 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் 12 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார்.
சூரியன் சிம்ம ராசியில் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே புதன், செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியோர் பயணித்து வருகின்றன. இதனால் சூரிய பெயர்ச்சிக்கு பின் சிம்ம ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, பணிபுரிபவர்கள் பதவி உயர்வையும் பெறலாம். இப்போது சிம்ம ராசியில் உருவாகியுள்ள சதுர்கிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப்போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். எதிர்பாராத பண வரவைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் நிறைந்திருப்பார்கள். இதனால் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி காண்பார்கள். குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வேலைகள் நல்ல பாராட்டைப் பெறும். தலைமைத்துவ பண்புகள் அதிகரிக்கும். புதிய தொழிலைத் தொடங்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையால் உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவார்கள். மேலும் பதவி உயர்வுகளும் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications