Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
12 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கபோகுது!
Chaturgrahi Yoga In Leo 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழும்.
இப்படி கிரகங்களின் சேர்க்கை ஏற்படும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியனின் சொந்த ராசியான சிம்ம ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவாகிறது. அதுவும் இந்த யோகமானது சிம்ம ராசியில் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அபரிமிதமான செல்வத்தையும், தொழிலில் நல்ல லாபத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்க வேண்டுமென்ற ஆசைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ரியல் எஸ்டேட், ஊடகம், கலை துறைகளில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமாகவும், லாபகரமாகவும் இருக்கும். தாயுடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும் மற்றும் அந்த பயணங்கள் நல்ல பண ஆதாயங்களைத் தரும். வணிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழக்கூடும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தம்பதிகளுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்தால், அது இக்காலத்தில் முடிவுக்கு வந்து, இருவருக்குமான பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications