Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
மேஷ ராசியில் உருவாகியுள்ள சதுர்கிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
Chaturgrahi Yoga: நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த மேஷ ராசியில் தான் ஏற்கனவே ராகுவும், புதனும் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையிலும் சந்திரனும் மேஷ ராசியில் நுழைந்திருப்பதால், சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. சதுர்கிரக யோகம் என்பது ஒரு ராசியில் 4 கிரகங்கள் ஒன்றாக பயணிக்கும் போது உருவாகும்.

தற்போது மேஷ ராசியில் குரு, ராகு, புதன், சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் ஒன்றாக பயணிப்பதால், சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. சதுர்கிரக யோகமானது மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும்.
இந்த சுப யோகத்தால் சில ராசிக்காரர்கள் நற்பலனைப் பெற்றாலும், இன்னும் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். இப்போது சதுர்கிரக யோகத்தால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரித்தில் நல்ல சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் இந்த யோக காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஒருவேளை உங்களின் பணம் எங்காவது சிக்கியிருந்தால், அது இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால், முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் பல நல்ல செய்திகளை பெற வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளன. முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications