Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Chaturgrahi Yoga After 100 Years: ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது உருவாகும் யோகங்கள் இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு அவ்வப்போது சதுர்கிரக யோகமும், திரிகிரக யோகமும் உருவாகும். இந்த இரண்டு யோகங்களும் சுப மற்றும் அசுப தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அந்த வகையில் அக்டோபர் 19 ஆம் தேதி செவ்வாய், கேது, சூரியன், புதன் ஆகிய 4 கிரகங்களும் துலாம் ராசியில் ஒன்றாக பயணிக்கவுள்ளன. இதனால் அந்த ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. துலாம் ராசியில் இந்த 4 கிரகங்களின் சேர்க்கையானது 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சிறப்பான யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசிப்பதோடு, நிறைய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது இந்த சதுர்கிரக யோகத்தால் நிதி நன்மைகளைப் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகமானது 7 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல வெற்றியைக் காணலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
வாழ்க்கைக் குறித்த எந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒருவருக்கொருவரு கலந்தாலோசித்து எடுத்தால், சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்கள் இந்த யோகத்தால் நல்ல ஒரு வரனைப் பெறலாம்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெறுவார்கள். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளன.
மேலும் அலுலகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த யோகத்தால் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள். வியாபாரிகள் இந்த காலத்தில் நல்ல லாபத்தைப் றெலாம். வணிகர்களுக்கு பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வேலையில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் பயணத்தை மேற்கொள்ள நேரிடும். ஆனால் இந்த பயணத்தால் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications