Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
பிப்ரவரியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு நல்ல முன்னேற்றத்துடன், செல்வமும் குவியப் போகுது..
Chaturgrahi Yog On February 2024: 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். ஜோதிடத்தின் படி, பிப்ரவரி மாதமானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, சதுர்கிரக யோகமும் உருவாகவுள்ளது. அதுவும் இந்த சதுர்கிரக யோகமானது சனி பகவானின் ராசியான மகர ராசியில் உருவாகவுள்ளது.
சதுர்கிரக யோகம் என்பது எப்போது ஒரு ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறதோ, அப்போது உருவாகும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மொத்தத்தில் நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறனுக்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். சிலர் பதவி உயர்வைப் பெறலாம். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றிகளையும், வளர்ச்சியையும் காண்பீர்கள். சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications