Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க..
100 ஆண்டுகள் கழித்து உருவாகும் சதுர்கிரக யோகம்: மே 31 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Chaturgrahi Yog In Taurus On May 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியல் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அதில் சில யோகங்கள் சில கிரகங்களின் அரிய சேர்க்கையினால் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகும்.
அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் வருகிற மே 31 ஆம் தேதி நான்கு கிரகங்களின் சேர்க்கையினால் ரிஷப ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது புதன், குரு, சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகவுள்ளது.

இந்த சுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது ரிஷப ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதோடு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் பணத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த யோக காலத்தில் பேச்சு மேம்படும். இதன் விளைவாக பல முக்கியமான காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications