Latest Updates
-
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
100 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் உயரும்..
Chaturgrahi Yog In Taurus 2024 After 100 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது திரிகிரக யோகம், சதுர்கிரக யோகம் போன்றவற்றை அவ்வப்போது உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சமீபத்தில் தான் குரு பகவான் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சூரியனும் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் மாத இறுதியில் நவகிரகங்களின் இளவரசனான புதனும் ரிஷப ராசிக்குள் நுழைவார். அதோடு சுக்கிரனும் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி யோகமும், நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகமும் ஒன்றாக உருவாகவுள்ளன. இது தவிர சூரியனும், புதனும் இணைந்து புதாதித்ய யோகத்தையும், சூரியனும், சுக்கிரனும் இணைந்து சுக்ராதித்ய யோகத்தையும் உருவாக்கவுள்ளனர்.
இப்படி ஒரே வேளையில் பல யோகங்கள் உருவாகவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்களால் நல்ல ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சதுர்கிரக யோகத்தால், வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். காதல் உறவுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகமானது மங்களகரமானதாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்கள் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை இல்லாதவர்கள் எதிர்பார்த்த நல்ல வேலையைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
