Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
500 ஆண்டுகளுக்கு பின் சூரிய கிரகண நாளில் நிகழும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது..
Solar Eclipse 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது ஒரு முழு சூரிய கிரகணமாக இருக்கும். இந்த கிரகணத்தின் போது நவகிரகங்களின் தலைவனான சூரியனும், கிரகங்களின் இளவரசனான புதனும், நிழல் கிரகமான ராகுவும், செல்வத்தை அளிப்பவரான சுக்கிரனும் மீன ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இதனால் மீன ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த சதுர்கிரக யோகமானது சூரிய கிரகண நாளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி நிலையில் உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது சூரிய கிரகண நாளில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகண நாளில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால், எதிர்பாராத பணம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுகூர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகண நாளில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகண நாளில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். வியாபாரம் செய்து வந்தால், நல்ல லாபத்தைக் காணலாம். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தைரியம் அதிகரிக்கும். சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பு எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications