Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
55 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வம் குவியும்...
Chaturgrahi Yog In Pisces 2024 After 55 Years: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், நிழல் கிரகமான ராகு மற்றும் செல்வத்தை அளிப்பவரான சுக்கிரன் மீன ராசியில் ஒன்றாக பயணித்து வருகின்றனர். இப்படி 4 கிரகங்கள் மீன ராசியில் ஒன்றாக பயணிப்பதால், சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது.

இந்த சுப யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். அதோடு தொழிலில் நல்ல முன்னேற்றமும், காதல் திருமணம் போன்றவை நடக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. வருமானம் மற்றும் லாப வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளதால், தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களாக இருந்தால், எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும். ஹோட்டல், தங்கம், வெள்ளி தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளன.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தால், இக்காலத்தில் அரசு வேலை கிடைக்கும். பணிபுரிந்து வருபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் தேர்தலில் நின்றால், வெற்றி கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் எதிர்பாராத வகையில் பணம் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் சொத்து, வாகனம் போன்றவை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications