Latest Updates
-
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்!
Chaturgrahi Yog In Capricorn On February 2024: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப மற்றும் ராஜ யோகத்தை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மகர ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது மகர ராசியில் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஒன்றாக பயணிக்கவுள்ளனர். இதனால் இந்த சதுர்கிரக யோகமானது பிப்ரவரி 12 முதல் மகர ராசியில் உருவாகவுள்ளது. ஏனெனில் பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் நுழையவுள்ளார்.

இந்த சதுர்கிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய பணம் கையில் சேரப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முதலீடுகளால் நிறைய லாபத்தையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் காணலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த யோக காலத்தில் நல்ல மன உறுதியுடன் இருப்பீர்கள். எடுக்கும் அனைத்து முடிவுகளும் பயனுள்ளதாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் அமையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications