Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்!
சதுர்கிரக யோகத்தால் அக்டோபர் 19 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண மழையில நனையப் போறாங்க...
Chaturgrahi Yog 2023 In Libra: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நல்ல மற்றும் கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அதேப்போல் கிரகங்களின் சேர்க்கைகளும், அவற்றால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது. அதுவும் துலாம் ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் துலாம் ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. சதுர்கிரக யோகம் என்பது மிகவும் மங்களகரமான யோகமாகும். இது 4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும்.

அப்படிப்பட்ட யோகமானது செவ்வாய், கேது, சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் துலாம் ராசியில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகம் அக்டோபர் 19 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களளின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் மிகவும் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வருமானத்தில் திடீரென்று உயர்வு ஏற்படும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும். வியாபாரிகள் மற்றும் வேலை செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வழக்கத்தை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, நல்ல நிதி பலன்களும் கிடைக்கும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் மரியாதை இக்காலத்தில் அதிகரிக்கும். தைரியம், வீரம், துணிச்சல் போன்றவை அதிகரிக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் இந்த யோகத்தால் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடித்து, நல்ல பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த யோக காலத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. நிதி நிலை இந்த யோகத்தால் வலுவாகும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications