Latest Updates
-
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க..
100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி அன்று நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Chandra Grahan On Holi 2024 After 100 Years: சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வந்து ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, பூமியின் நிழல் சந்திரன் மேல் படும் போது ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் ஒரு ஆண்டில் இரண்டு முறை நிகழும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி நிகழ்கிறது. இந்நாளில் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இப்படி ஹோலி பண்டிகை நாளில் சந்திர கிரகணம் நிகழ்வது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதனால் இந்த சந்திர கிரகணம் சற்று முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஆனால் ஹோலி நாளில் சந்திர கிரகணம் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், விருப்பங்கள் நிறைவேறக்கூடியதாகவும் இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணமானது நற்பலனைத் தரும். குறிப்பாக வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்தால் அல்லது ஏற்கனவே செய்திருந்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். மேலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது அற்புதமான பலன்களைத் தரும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தை பெறுவார்கள். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ஆளுமையிலும் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் தேடி வரும். முக்கியமாக இந்த கிரகணத்தால் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நல்ல பொருள் இன்பங்களைத் தருவதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை அல்லது வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications