Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்க மனைவிகிட்ட இருக்கா?
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றில் சிறந்த இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். அவரின் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் சாணக்கியரின் ஆழ்ந்த புலமைக்கு சான்றாகும். ஒரு பெண்ணுக்கு என்னென்ன குணங்கள் தேவை, என்னென்ன குணங்கள் ஒரு பெண்ணை திருமண வாழ்க்கையில் சிறந்த மனைவியாக்குகின்றன என்பதை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புத்திசாலித்தனம்
அனைத்து பெண்களிடமும் அவசியம் இருக்க வேண்டிய குணம் புத்திக்கூர்மையாகும். புத்திசாலி மனைவி மிகவும் சாதுர்யமான முடிவுகளை எடுத்து குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வருவார்கள். அத்தகைய மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுப்பார்கள்.

நிர்வாகத் திறமை
நிர்வாகத்திறமை, நிதி மற்றும் முடிவெடுப்பதில் சிறந்து விளங்கும் மனைவிகள் குடும்பத்தை நல்வழிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். இந்த குணமுள்ள பெண்கள் சமூகத்தில் அவர்களின் குடும்பத்தை தலைநிமிர வைப்பார்கள். இப்படிப்பட்ட மனைவிகள் கிடைப்பது கணவர்களுக்கு ஆறுதலையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
இனிமையாக பேசுவது
அன்பாகவும், மரியாதையாகவும் பேசும் மனைவிகள் கணவருக்கும், அவரின் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிப்பார்கள். மனைவியின் ஆறுதலான வார்த்தைகள் எந்தவொரு நெருக்கடியிலிருந்தும் வெளிவர கணவர்களுக்கு உதவும். அவர்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரால் மிகவும் விரும்பப்படுவார்கள்.
விசுவாசம்
நல்லொழுக்கம் மற்றும் விசுவாசமிக்க மனைவி தன் கணவனையோ அல்லது குடும்பத்தையோ ஒருபோதும் ஏமாற்ற மாட்டார். அவர்கள் எப்போதும் தங்கள் கணவருக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும், பணிவாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் மனமும், உடலும் தூய்மையானவர்களாகவும் நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
ஆதரவு
இது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். முக்கிய விஷயம் என்னவென்றால், தங்கள் கணவருக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும்போது சரியான நேரத்தில் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆதரவளிப்பது. இது வெற்றிகரமான திருமணத்திற்கு அடிப்படை என்று சாணக்கியர் கூறுகிறார். குழந்தைகளைப் பற்றியோ அல்லது குடும்பத்தில் மற்ற விஷயங்களைச் செய்வதாகட்டும், அது கணவரின் பொறுப்பு மட்டுமல்ல என்பதை அவர் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நேர்மை
ஒரு சிறந்த மனைவி திருமணத்தில் எப்போதும் நேர்மையாக இருப்பார். அவர்கள் வாழ்க்கையில் சிறந்த குணங்கள் மற்றும் நல்ல மதிப்புகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலும் தர்மத்தின்அடிப்படையில் அமையும்.
இந்த குணங்களைத் தவிர, மனைவி தன் கணவனுக்கும் குடும்பத்துக்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சாணக்கியர் கருத்து கூறுகிறார். மேலும் பொறுமை அவர்களின் முக்கிய குணங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
