இந்த ராசிக்காரங்க அரசியலில் கொடிகட்டிப் பறப்பாங்களாம்.. இவங்கள யாராலும் அசைக்க முடியாதாம்.. உங்க ராசி என்ன?

Career in Politics: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறுபடுகிறதோ, அதேப் போல் ஒவ்வொருவரின் ஆசைகளும், கனவுகளும் வேறுபடும். குறிப்பாக ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒவ்வொருவருக்கும் கனவு வேலை என்று ஒன்று இருக்கும். ஆனால் அந்த வேலையில் நாம் கொடிகட்டி பறக்க வேண்டுமானால், அதற்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்க வேண்டும்.

அந்த வகையில் ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு தொழில் சிறப்பாக இருக்கும். அதுவும் அரசியலை எடுத்துக் கொண்டால், சில ராசிக்காரர்கள் சிறந்து விளங்குவார்கள். இப்போது பிறப்பில் நல்ல தலைவர்களாகவும், சிறந்த தலைவருக்கான குணத்தைக் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசிக்கு எப்படி என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Career in Politics Prediction for All 12 Zodiac Signs In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் மற்றும் அச்சமற்றவர்கள். இவர்களின் முடிவெடுக்கும் திறன் மிகவும் நன்றாக இருக்கும். தங்கள் பேச்சு மற்றும் நடத்தை மூலம் மக்களை எளிதில் ஈர்ப்பார்கள். இவர்கள் அரசியலுக்கு சென்றால் நல்ல பதவியைப் பெறுவார்கள். இவர்களுக்கு சக்திவாய்ந்த அரசியல்வாதியாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். ஒருவேலையை செய்ய முடிவெடுத்தால், அதை முடிக்காமல் விடமாட்டார்கள். புதுபுது விஷயங்களை தெரிந்த கொள்ள விரும்புவார்கள். சில நேரங்களில் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். இது சில சமயங்களில் பிரச்சனையாகவும் மாறும். கோடிக்கணக்கான மக்களை தங்கள் வார்த்தைகளால் தாக்கும் வல்லமை கொண்டவர்கள். இதனால் அவர்களின் கருத்தை அனைவரும் விரைவில் ஒப்புக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் புத்திசாலியான மற்றும் மரியாதைக்குரிய தலைவராக அறியப்படுவார்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் உஷாரானவர்கள் மற்றும் புத்திசாலியானவர்கள். இவர்களுக்கு என்ற தனித்துவமான பேசும் ஸ்டைல் உள்ளது. சிறந்த பேச்சாளராக இருப்பதோடு, அவர் நன்றாக கேட்கவும் செய்வார்கள். இவர்கள் பிறப்பால் தலைவர்களாக இல்லாவிட்டாலும் அரசியலில் மிகவும் புத்திசாலிகள். இவர்கள் அரசியலுக்கு வந்த நல்ல தலைவராக இருப்பார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் எப்போதும் மரியாதையை விரும்புவார்கள். எங்கு சென்றாலும் அங்கே அவர்களுக்கு நல்ல பெயர் இருக்கும். இவர்களுக்கு இயற்கையாகவே வழிநடத்தும் திறன் உள்ளது. ஆனால் இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இந்த ஒரு காரணத்தினால் இவர்கள் அரசியலில் நுழைந்தால், அதுவே அவர்களை வீழ்த்தும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அரசியலில் இறங்கினால், அவர்களுக்கு பெரிய மரியாதை கிடைக்கும். இவர்கள் தனது வசீகரம் மற்றும் அரசியல் நடத்தை மூலம் அனைவரின் மனதையும் வெல்வார். ஒரு நல்ல தலைவனுக்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளவர்கள். இவர்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொண்டு வருகிறது. தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். தங்கள் இலக்குகளை அடைய முழுமையாக போராடுவார்கள். இது மக்களை எளிதில் ஈர்க்கிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் லட்சியவாதிகள். அதே சமயம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். சிறு விஷயங்களையும் மனதில் கொள்வார்கள். இவர்கள் அரசியலில் ஈடுபட விரும்பமாட்டார்கள். இவர்கள் இந்தத் துறைக்கு பொருந்தாவிட்டாலும், அரசியலில் ஈடுபட்டால் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆலோசகராக முடியும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார்கள். தங்கள் வாழ்க்கையை முறையாக வாழ விரும்புவார்கள். இவர் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பார். புத்திசாலித்தனமாக யோசித்து நல்ல திட்டங்களை முன்கூட்டியே உருவாக்கக்கூடியவர். இவர்கள் ஒரு சிறந்த ராஜதந்திரி.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருப்பார்கள். செய்யும் எல்லாவற்றிலும் இவர்கள் தீவிரமானவர்கள். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு இருக்கும். கவர்ந்திழுக்கும் மற்றும் காந்த ஆளுமை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். மக்கள் தானாகவே அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இதனால் அவர் ஒரு வலுவான தலைவர் என்பதை நிரூபிக்கிறார். மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நிலையற்ற இயல்புடையவர்கள். மிகவும் விசுவாசமானவர்களாகவும் நம்பகமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் கருத்தை எளிதில் அனைவருக்கும் தெரிவிக்கிறார்கள். குழுப்பணி என்று வரும்போது, ​​இவர்கள் ஒன்றாகச் செயல்பட்டு வெற்றியை அடைகிறார்கள். நல்ல நிர்வாகத் திறன் கொண்டவர்கள். இவர்கள் அரசியலில் இறங்கினால் நல்ல நிலையை அடைவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் விசுவாசமானவர்கள். இவர்களின் அதிபதி சனி. எனவே சிறந்த ஒழுக்கம் உடையவர்களாக இருப்பர். இவர்கள் அரசியலில் நல்ல வாழ்க்கையை உருவாக்க முடியும். நீண்ட திட்டங்களை வகுப்பதில் வல்லுனர்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றியை எப்படி அடையலாம், மற்றவர்களை கடினமாக உழைக்க தூண்டுவது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். சுதந்திரத்தை விரும்புவார்கள். முற்போக்கான சிந்தனையாளர்கள் மற்றும் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர விரும்புவார்கள். எப்போதும் பெரிய மற்றும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய நினைக்கிறார்கள். இவர்கள் பிறப்பில் இருந்தே சிறந்த தலைவராகக் கருதப்படுகிறார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் கலைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள். இவர்கள் சூழ்நிலைகளை எளிதில் புரிந்துகொண்டு விரைவில் மக்களுடன் பழகுவார்கள். அரசியலில் நிறைய பெயர் சம்பாதித்து அனைவரின் ஆதரவையும் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion