Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
2024-ல் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
Career Horoscope 2024: இன்னும் சில நாட்களில் 2024 புத்தாண்டில் நுழையுவுள்ளோம். ஒருபுதிய ஆண்டில் நுழையும் போது நமது மனதில் பலவிதமான கேள்விகள் எழும். முக்கியமாக 90 சதவீத மக்களின் மனதில் எழும் கேள்வி புத்தாண்டில் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதாகவே இருக்கும்.
அதுவும் வேலை செய்து கொண்டிருப்பவர்களை எடுத்துக் கொண்டால், புதிய ஆண்டில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்குமா என்றும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களாக இருந்தால், இந்த புதிய ஆண்டிலாவது நல்ல வேலை கிடைக்குமா என்றும் தான் இருக்கும்.

ஜோதிடத்தின் படி, வருகிற 2024 புத்தாண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக குரு பகவான் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் காரணியாக கருதப்படுகிறார். இந்த 2024 ஆம் ஆண்டில் குரு பகவானின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை பிரகாசமாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 9 ஆவது வீட்டில் இருக்கும் குரு பகவான், மே மாதம் முதலாக 10 ஆவது வீட்டில் பயணிக்கவுள்ர். இதனால் வேலை செய்யும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலில் எதிர்பாராத வகையில் வளர்ச்சியை காணக்கூடும்.
உடன் வேலை செய்வோர் உங்களின் செயல்திறனால் ஈர்க்கப்படுவார்கள். நீங்கள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நல்ல லாபத்தையும் தரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வேலை தேடி வரும். குரு பகவானின் அருளால் அதிர்ஷ்ட கதவு திறக்கும். உங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாடு தொழிலில் ஒரு நல்ல நிலையை அடைய முக்கியமாக இருக்கும். முக்கியமாக செல்வாக்குமிக்கவர்களின் நட்புறவு இந்த ஆண்டில் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. குரு பகவானின் நிலையால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர்கள், தங்கள் பணியிடத்தில் நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள்.
சிலர் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்து. வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். உங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால், சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு வரலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொழில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இந்த ஆண்டில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் தலைமைத்துவ பண்புகள் இந்த ஆண்டில் சிறப்பாக வெளிப்படும். தொழிலில் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
வேலை இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். தொழில் இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டில் உங்களின் திறமை மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வைப் பெறலாம்.
உங்களின் சிறப்பான செயல்திறன் மற்றவர்களால் பாராட்டப்படும். முக்கியமாக உங்களில் உங்கள் அலுவலகம் நல்ல முன்னேற்றத்தைக் காணும். குரு பகவானின் அருளால் பல நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்தால், 2024 ஆம் ஆண்டில் நல்ல வேலையைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். குரு பகவானின் அருளால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த புதிய ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால், அதை இந்த ஆண்டில் முயற்சித்தால் நல்ல பலனைப் பெறலாம். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











