2024-ல் உங்க ராசிப்படி தொழில் எப்படி இருக்கும்-ன்னு தெரியணுமா? இந்த 5 ராசிக்கு அருமையா இருக்கப்போகுது..

Career Horoscope 2024 in Tamil: 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் 10 நாட்களில் புத்தாண்டில் நுழையவுள்ளோம். புதிய ஆண்டில் நுழைய இருப்பதால், பலருக்கும் வருகிற புத்தாண்டில் தொழில் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஏனெனில் தற்போது நிறைய பேர் தங்கள் தொழிலில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டில் நீங்கள் உங்கள் வேலையில் பல சிரமங்களை சந்தித்திருக்கலாம். ஆனால் 2024 ஆம் ஆண்டில் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை அற்புதமாக இருக்கப் போகிறது. அதே சமயம் சில ராசிக்காரர்கள் சற்று சிரமங்களை சந்தக்கலாம். இப்போது 2024 ஆம் ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

Career Horoscope 2024 Predictions For 12 Zodiac Signs In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆனால் சனி பகவானின் நிலையால் கடின உழைப்பின் மூலம் மட்டுமே உங்கள் இலக்கை அடைவீர்கள். வணிகத்தில் இருந்தால், புதிதாக எதையும் அறிமுகப்படுத்த முயற்சிக்காதீர்கள். நல்ல நேரம் வரும் வரை காத்திருங்கள். உங்கள் திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிந்தால் மட்டுமே வேகமாக முன்னேற முடியும். சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியோரின் அருளால் பிப்ரவரி நடுப்பகுதியில் நல்ல தொழில் வளர்ச்சியைக் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். முதல் மாதத்தில் நல்ல வெற்றியையும், செழிப்பையும் சுக்கிரன் அளிப்பார். வியாபாரம் செய்து வந்தால், செவ்வாய் பகவான் நல்ல ஆற்றலை வழங்குவதோடு, தொழிலை விரிவுபடுத்த பல யோசனைகளையும் அளிப்பார். புதனால் சில முக்கியமான பிரச்சனைகள் வெளிப்படும். அதே சமயம் அந்த பிரச்சனைகளும் விரைவில் முடிவுக்கு வரும். செவ்வாயின் நிலையால் பிப்ரவரி மாதம் சற்று போராட்டம் நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் கவலைப்பட தேவையில்லை. வியாபாரம் செய்து வருபவர்களுக்கு தன்னம்பிக்கையும், நேர்மறையான அணுகுமுறையும் கணிசமான வளர்ச்சியைக் கொண்டு வரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக நல்ல பலனளிக்கும். வியாபாரம் செய்பவர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செவ்வாயின் தாக்கமும் சற்று மோசமாக இருக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனால் அவை அனைத்தையும் எளிதாகவும், திறமையாகவும் கையாள்வீர்கள். புதனின் அருளால் தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு சூழ்நிலையையும் திறந்த மனதுடன் அணுகினால், நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் தொழில் ரீதியாக சற்று மோசமாக இருக்கும். மனம் ஒருவித குழப்பத்துடனேயே இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் போடும் திட்டத்தில் தவறு ஏற்படலாம். ஆனால் இந்த ஆண்டின் மே மாதத்தில் நிகழும் குரு பெயர்ச்சியால் தொழிலில் வளர்ச்சியை காணக்கூடும். பிப்ரவரி மாதத்தில், புதனின் அருளால் தொழில் வளர்ச்சிக்கு யாரேனும் ஒருவர் யோசனையுடன் உங்களை அணுகலாம். இது தொழிலில் நல்ல லாபத்தைப் பெற உதவிபுரியும். இருப்பினும், வியாபாரிகள் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு கேதுவின் நிலையால் அவ்வளவு நன்றாக இருக்காது. சனி பகவானின் நிலையால் உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படக்கூடும். ஆனால் குரு மற்றும் சுக்கிரனால் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரம் செய்து வந்தால், உங்களின் செயல் அல்லது முடிவால் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் மாதத்தில் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். புதனின் ஆதரவால் விஷயங்கள் படிப்படியாக சரியாகும். வியாபாரத்தில் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். ஜனவரி மாதத்தின் இறுதியில் உங்கள் வேலையில் சற்று அசௌகரியமாக உணர்வீர்கள். ஆனால் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தொழிலில் நல்ல சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு தொடங்கும் போது செவ்வாயின் தாக்கத்தால் தொழிலில் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் செவ்வாயின் அருளால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். அதுவும் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் வணிக திட்டங்களை செயல்படுத்தினால் நல்ல வளர்ச்சியைக் காணலாம். ஆனால் பிப்ரவரி மாதத்தில் புதனின் தாக்கம் சிக்கலானதாக இருக்கும் என்பதால், நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். சூழ்நிலைகளை சரியாக ஆராய்ந்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும். வணிகம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் எந்த திட்டத்தையும் மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சூரியன் மற்றும் செவ்வாயின் அருளால் பணியிடத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் சிறப்பாக செயல்படுவீர்கள். வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் முக்கியமான திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செவ்வாயின் ஆதரவு போதுமானதாக இருப்பதால், உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும் மற்றும் அதனால் தொழிலில் வெற்றி கிடைக்கும். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால், பிப்ரவரி மாதத்தில் புதிய திட்டங்களால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வியாபாரம் செய்பவர்கள், சில சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புக்கள் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில் உங்கள் பணியிடத்தில் சில சிக்கலான விஷயங்கள் தலைத்தூக்கும். வியாபாரம் செய்பவர்கள் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் போக போக செவ்வாய் பகவான் அளிக்கும் தைரியத்தால், உங்களின் இலக்குகளை சிறப்பான செயல்திறன் மூலம் சற்று கடினமாக உழைத்து அடைவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியும், நிதி ஆதாயமும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சில பிரச்சனைகள் உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடும். ஆனால் நேர்மறையாக நடந்து கொண்டால், நல்ல வெற்றியைப் பெறலாம். உங்கள் பணியிடத்தில் நிலவும் சூழ்நிலையைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள புதன் உங்களுக்கு எப்போதும் உதவி புரிவார். ஆனால் நீங்கள் நினைத்ததை அடைய சனி பகவான் கடினமாக உழைக்க வைப்பார்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சற்று பரபரப்பாக இருக்கும். வியாபாரம் செய்து வந்தால், புதிய விஷயங்களை முயற்சிக்க நினைக்கலாம். மேலும் வியாபாரிகளுக்கு சுக்கிரனின் அருளால் நல்ல நிதி நன்மைகளை வழங்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால் ஜனவரி மாத இறுதியில் உங்கள் பணி வழக்கத்தில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். இருப்பினு பிப்ரவரி மாதத்தில் இருந்து பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் புதன் வழங்குவார்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானின் அருளால் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகத்தில் இருந்தால், உங்கள் உற்பத்தித் திறன் மேம்படலாம். ஆனால் பணியிடத்தில் சில சவால்கள் இருக்கும். அதுவும் பிப்ரவரி மாதத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபர்களுக்கு பிப்ரவரி மாத இறுதி முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் நிலுவையில் உள்ள வேலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

Desktop Bottom Promotion