Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
மகர ராசிக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
Capricorn Yearly Horoscope 2024 in Tamil: நீங்கள் மகர ராசியா? வருகின்றன 2024 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? சனி பகவானை ராசி நாதனாக கொண்டவர்கள் தான் மகர ராசிக்காரர்கள்.
இந்த மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சற்று சவாலானதாக இருக்கும். எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், அதை தைரியமாக எதிர்கொள்வீர்கள். அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் எளிதில் விடுபடுவீர்கள். நிதி ரீதியாக இந்த ஆண்டு சாதகமாக இருக்கும்.

ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால், பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. சனி பகவான் நல்ல நிதி நன்மைகளை பெற வைப்பார். கடின உழைப்பை போட்டால் நல்ல பலனைப் பெறலாம். மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் சிறு பிரச்சனைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்போது 2024 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை, கல்வி, குடும்ப வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை மற்றும் நிதி ரீதியாக எப்படி இருக்கும் என்பதை விரிவாக காண்போம்.
2024-ல் தொழில் வாழ்க்கை
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக வருகிற புத்தாண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இந்த ஆண்டு உங்கள் தொழிலில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். கடின உழைப்பின் அடிப்படையில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வேலையை மாற்ற விரும்பினால், நீங்கள் பல நல்ல சலுகைகளைப் பெறலாம். ஆண்டின் இறுதி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இது தவிர, நீங்கள் விரும்பிய இடமாற்றத்தையும் பெறலாம். இந்த ஆண்டு, வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவராக இருந்தால் இந்த வருடம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
2024-ல் வியாபாரம்
மகர ராசியைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு கலவையானதாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இருப்பினும், பாதகமான சூழ்நிலைகளிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். ந்த நேரத்தில், நீங்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுப்பீர்கள், இது உங்களுக்கு பெரிய அளவில் நிம்மதியைத் தரும். ஆண்டின் முதல் சில மாதங்கள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், எந்தவொரு கவனக்குறைவையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் கடின உழைப்பு வீணாகிவிடும்.
2024-ல் குடும்ப வாழ்க்கை
மகர ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டில் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியும். இருப்பினும், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அன்புக்குரியவர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நீங்கள் கோபத்தையும் அவசரத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுறது. ஆண்டின் இறுதியில், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சில மத ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்லலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
2024-ல் திருமண வாழ்க்கை
திருமணமான மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சாதகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலக் குறைவால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மோசமான உடல்நலம் காரணமாக, உங்கள் அன்புக்குரியவர் எரிச்சலடையலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு உங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நேரத்தை செலவிடுவீர்கள்.
2024-ல் காதல் வாழ்க்கை
காதலிப்பவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நன்றாக இருக்கும். இந்த ஆண்டில் உங்கள் உறவு இன்னும் வலுவடையும். உங்களுக்கிடையே அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உறவு மோசமாக மாற வாய்ப்பு உள்ளது. தேவையற்ற ஈகோ மற்றும் மோதல்களைத் தவிர்த்து, உங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நல்லது. இந்த காலகட்டத்தில் உங்கள் துணையின் ஆரோக்கியமும் சற்று பலவீனமாக இருக்கும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் காதல் செழிக்கும்.
2024-ல் நிதி நிலை
நிதி ரீதியாக மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் வருமானம் கூடும். உங்கள் கடின உழைப்பு மற்றும் சரியான முடிவுகளுக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மூதாதையர் சொத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம். ஆண்டின் நடுப்பகுதியில் உங்களுக்கு செலவு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில், குடும்ப உறுப்பினரின் உடல்நலக்குறைவு காரணமாக உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். மே மாதத்திற்குப் பின் வரும் காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய சொத்து, வாகனம் போன்றவற்றையும் வாங்கலாம்.
2024-ல் கல்வி
மகர ராசியைச் சேர்ந்த மாணவர்கள் 2024 ஆம் ஆண்டில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், கடினமாக உழைக்க வேண்டும். ஆண்டின் முதல் 2 மாதங்கள் மற்றும் கடைசி 3 மாதங்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் படிப்பில் ஆர்வமாக இருப்பீர்கள், உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் இருக்கும். உயர் கல்விக்கான முயற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் இந்த ஆண்டு சில சிரமங்களை சந்திக்க நேரிடும். பயனற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கல்வியில் ஏற்படும் தடைகள் உங்களை எரிச்சலடையச் செய்யலாம். நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
2024-ல் ஆரோக்கியம்
2024 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒழுங்கற்ற தினசரி வழக்கத்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். உணவு மற்றும் குடிப்பழக்கங்களில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர, நீங்கள் தேவையற்ற கவலைகளையும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் மனநல பிரச்சினைகள் உங்களை மூழ்கடிக்கும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
