Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
இதுவரை நடந்த கேன்ஸ் விழாவிற்கு ஜோடியாக வந்து பலரது கவனத்தை ஈர்த்த பிரபலங்கள்!
Cannes 2023: 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது மே 16 ஆம் தேதி தொடங்கி, மே 27 ஆம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.
கேன்ஸ் திரைப்பட விழாவானது வெறும் சினிமா கொண்டாட்டத்தைத் தவிர, இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பலரும் இந்த சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் போது பல வித்தியாசமான மற்றும் கண்கவர் ஆடைகளை அணிந்து வருவார்கள்.

கேன்ஸ் திரைப்பட விருது விழாவிற்கு பிரபலங்கள் தனியாக மட்டுமின்றி, சில சமயங்களில் ஜோடியாக வந்தும் அசத்தியுள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவானது இன்று ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரை நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஜோடியாக வந்து பலரை ஆச்சரியப்படுத்தியதோடு, அதிகம் பேசப்பட்ட சில ஜோடிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்
கேன்ஸ் திரைப்பட விழாவில் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வரும் உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் பலமுறை தனது கணவருடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். கடைசியாக இந்த ஜோடி 2014 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் V-நெக்லைன் கொண்ட ஆஃப் ஒயிட் கவுனையும், அபிஷேக் பச்சன் கருப்பு நிற நீளமான குர்தா மற்றும் ட்ரௌசரையும் அணிந்து வந்திருந்தனர்.
ஜார்ஜ் குளூனி மற்றும் அமல் குளூனி
இந்த நட்சத்திர ஜோடி 2016 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவில் கொண்டனர். அப்போது ஜார்க் வெள்ளை நிற சட்டைக்கு கருப்பு நிற டக்ஷீடோவை அணிந்திருந்தார் மற்றும் அமல் வெளிரிய மஞ்சள் நிற ஒற்றைத் தோற்பட்டைக் கொண்ட தை-ஹை ஸ்லிட் கவுனை அணிந்து வந்திருந்தார்.
பிளேக் லைவ்லி மற்றும் ரியான் ரெனால்ட்ஸ்
இந்த ஜோடி 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் மற்றும் இவர்கள் 2014 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவில் ஜோடியாக கலந்து கொண்டனர். அதில் ப்ளேக் மோனோகுரோம் ஆஃப் ஷோல்டர் கவுனையும், ரியான் மோனோகுரோம் டக்ஷீடோவையும் அணிந்து வந்திருந்தனர்.
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ்
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் தம்பதிகள் முதன்முதலாக 2019 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜோடியாக கலந்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணமானது. அதன் பின் அவர்கள் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து அசத்தி வருகிறார்கள். அப்படி 2019 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் போது, பிரியங்கா சோப்ரா அழகிய வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் மற்றும் அடுக்குகளைக் கொண்ட வெள்ளை நிற கவுனையும், நிக் ஜோனாஸ் வெள்ளை நிற டக்ஷீடோவில் வந்திருந்தனர்.
ஜேவியர் பார்டெம் மற்றும் பெனிலோப் குரூஸ்
இந்த ஜோடி 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி 2018 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவிற்கு ஜோடியாக கலந்து கொண்டனர். அப்போது பெனிலோப் வின்டேஜ் கருப்பு நிற ஸ்ட்ராப் கவுனையும், ஜேவியர் பெர்சியன் நீலம் மற்றும் கருப்பு டக்ஷீடோவையும் அணிந்து வந்திருந்தனர்.



Click it and Unblock the Notifications
















