Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
1 வருடம் கழித்து மிதுனத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Budhaditya Yog In Gemini On June 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் புதன் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் குறுகிய நாட்களில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.
இத்தகைய புதன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து மறுநாளே, அதாவது ஜூன் 15 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மிதுன ராசிக்குள் நுழைகிறார்கள். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையான புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராயோகமானது ஜூன் மாதத்தில் இரண்டு முறை உருவாகிறது. இதனால் இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைதது ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக மிதுன ராசியில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பரம்பரை சொத்துக்களைப் பெறக்கூடும். நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் குணமாகும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். சொத்துக்களை வாங்க, விற்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கி முடிவடையும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் வேலை பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் வெற்றியுடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மற்றம் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications