Latest Updates
-
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
புதாதித்ய ராஜயோகத்தால் ஜூலை 16 முதல் அடுத்த 9 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Budhadhitya Rajyog in Cancer On July 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் ஒரே ராசியில் நிகழும் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் புத்திகாரகனான புதன் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் கடக ராசியில் புதன், சூரியன் சேர்க்கையால் புதாத்திய ராஜயோகம் உருவாகிறது.

கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரன் சூரியனின் நண்பராக கருதப்படுகிறது. எனவே கடக ராசியில் சூரியன் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்க அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது கடக ராசியில் உருவாகும் புதாத்திய ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையையும் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். குடும்பத்துடனான உறவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் எதிர்பாராத பல நல்ல பலன்கள் கிடைப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். தம்பதிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரிகள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு தங்கள் வேலையை மாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தலைமைத்துவ திறன்கள் மேம்பட்டிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகிறது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் சில அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். இக்காலத்தில் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சில நற்செய்திகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அரசு வேலை செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் இந்த யோக காலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications