Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்
புதன் பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு: ஜூலை 9 முதல் பண மழை கொட்டப்போகுதாம்!
Mercury Transit In Tamil: நவகிரகங்கள் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், வேத ஜோதிடத்தின் படி, புதன் ஒரு நடுநிலை கிரகமாக இருக்கிறது. புதன் அதன் ஜாதகத்தின் நிலையைப் பொறுத்து மக்களுக்கு பலன்களைத் தருகிறது.
புதன் கிரகம் புராண ஜோதிட மற்றும் வானியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. புதன் பெயர்ச்சி தொடர்பு, மாறுபாடு, தர்க்கரீதியான சிந்தனை, தகவமைப்பு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றைக் குறிக்கிறது. அனைத்து கிரகங்களும் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும்.

அப்படி மாற்றும் போது சில நேரங்களில் கிரக சேர்க்கைகளும், அவற்றால் சுப மற்றும் அசுப யோகங்களும் உருவாகும். தற்போது மிதுன ராசியில் அமர்ந்திருக்கும் புதன் 2023 ஜூலை 9ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
சாவான் மாதத்தில் இது ஒரு முக்கியமான மாற்றமாகும். தற்சமயம் ஜூலை 9ஆம் தேதி கடக ராசியில் பிரவேசிக்க இருக்கும் புதன் அடுத்து மிதுன ராசிக்கும் செல்ல இருக்கிறார். கிரங்களின் இந்த இடப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
புதனின் ராசி மாற்றத்தின் பலனை மேஷ ராசிக்காரர்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதன் பெயர்ச்சியின் பலன் மூலம் உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிடுவீர்கள் மற்றும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
ரிஷபம்
புதனின் இடமாற்றத்திற்கு பிறகு ரிஷப ராசி நேயர்கள் நேர்மறையான விளைவுகளை காணலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். உங்கள் நிதி நிலை பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் சண்டைகளும் இல்லாமல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்துடன் நீங்கள் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியில் புதன் இடம்பெயர உள்ளதால், இது உங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வரும். வணிகம் மற்றும் சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
உங்களின் வருமானமும் உயர வாய்ப்புகள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதன் மூலம், எதிர்காலத்திற்காகவும் சேமிக்க முடியும். புதன் கிரகத்தின் இடப் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக அதிக பலனை பெறுவார்கள்.
கன்னி
ஜூலை மாதம் புதன் சஞ்சாரத்தால் அதிக பலன்களை நீங்கள் பெறுவீர்கள். வலுவான நிதி நிலையை நீங்கள் பெறுவதோடு, மகிழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியுடன் நல்ல உறவு மேம்படும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
