Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த 5 ராசி பெண்கள் அசாத்திய தைரியசாலிகளாம்... இவங்க ஒரு விஷயத்தை நினைச்சா அதை முடிக்காம விடமாட்டாங்களாம்...!
ஜோதிடம் ஒவ்வொரு ராசிக்குமான ஆளுமையைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒரே ராசியாக இருந்தாலும் அவர்களின் ஆளுமைகள் பாலினத்தைப் பொறுத்து மாறுபடலாம். அதன்படி சில ராசிகளில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சக்திவாய்ந்தவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள், அது அவர்களை மற்றவர்களால் வெல்ல முடியாததாக மாற்றுகிறது.
அவர்கள் வலிமையானவர்கள், யாருக்கும் பயப்பட மாட்டார்கள். அவர்கள் தங்கள் சொந்த காலில் நிற்க விரும்புவார்கள். அவர்கள் ஒரு போர்வீரர் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர், அது அனைவராலும் போற்றக்கூடியது. உத்வேகத்திற்காக அவர்களை எதிர்பார்க்கும் இளைய தலைமுறையினருக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருப்பார்கள். இந்த பதிவில் மிகவும் தைரியசாலியாக இருக்கும் பெண் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
இந்த பெண்கள் பிடிவாதமானவர்கள் மற்றும் வலுவான புத்திசாலித்தனம் கொண்டவர்கள். அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை மற்றும் அவர்கள் விரும்பியதைப் பெறுவதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.
அவர்களின் பிடிவாதமானது அவர்களின் வலிமையான இதயத்தை உயிர்ப்பிக்கும் நெருப்பாக செயல்படுகிறது. வாழ்க்கையில் அனைத்து கடினமான பிரச்சனைகளுக்கும் மத்தியில், ரிஷப ராசி பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தனியாக சமாளிக்கும் தைரியம் கொண்டவர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்கள் மற்றும் அச்சமற்றவர்கள். அவர்கள் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதற்கு பயப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான அனுபவங்களையும் பெற விரும்புகிறார்கள். அவர்கள் தைரியம் மற்றும் வலிமையான பெண்ணுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சனையையும் தீர்க்கும் திறன் அவர்களிடம் உள்ளது.
கன்னி
கன்னி ராசி பெண்கள் வெளித்தோற்றத்திற்கும் சரி, மனதளவிலும் சரி மிகவும் கடினமானவர்கள் மற்றும் தைரியமான அணுகுமுறை கொண்டவர்கள். அவர்கள் யாரையும், எந்த விஷயத்தையும் தங்கள் முன்னேற்றத்தை பாதிக்க அனுமதிக்க மாட்டார்கள் அது அவர்களுக்கு எவ்வளவு பிடித்த விஷயமாக இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் கனவுகளை அடைவதைத் தடுக்க அனுமதிக்க மாட்டார்கள். அவர்களின் அசையாத மனம் அனைவருக்கும் உத்வேகமாக விளங்குகிறது.
தனுசு
தனுசு ராசி பெண்கள் நம்பிக்கைக் கொண்டவர்கள், வேடிக்கையானவர்கள் மற்றும் உற்சாகமானவர்கள். ஆனால் அவர்கள் வேடிக்கையாக இருப்பதால் அவர்கள் பலவீனமானவர்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.
அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் மீது வலுவான விருப்பமுள்ளவர்கள் மற்றும் மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளில் நேர்மறையான சூழலில் கூட நேர்மறையான ஒளியைக் காணும் திறனைக் கொண்டுள்ளனர். எதிர்மறை சூழ்நிலையானது அவர்களின் மனநிலையைப் பாதிக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
மகரம்
மகர ராசி பெண்கள் வலிமையானவர்கள், நம்பிக்கையானவர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் அதிகாரம் மற்றும் சுதந்திர உணர்வு கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல யாருடைய ஆதரவும் தேவையில்லை.
அவர்கள் உயர்ந்த மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் சிறந்த தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் சுதந்திரம் உண்மையில் மற்றவர்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டுவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications