Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நல்ல அதிர்ஷ்டத்திற்காக இன்று வரை ரத்தின கற்களை அணிந்துள்ள சில கோலிவுட் பிரபலங்கள்!
Bollywood Celebrities And Gemstones: வாழ்க்கை என்பது இயற்கை உருவாக்கிய சிக்கலான அமைப்பு. இப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் நல்ல வளர்ச்சியைக் காண வேண்டுமானால் அதற்கு ஒருவரது கடின உழைப்பு மட்டுமின்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அனைவருக்குமே எப்போதும் ஆதரவாக இருக்காது. சிலருக்கு ஒருசில பொருட்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். ஏனெனில் அந்த பொருட்கள் அந்நபருக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
அப்படி ஒருவரது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதில் ரத்தின கற்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த ரத்தின கற்கள் தனித்துவமான சக்தியைக் கொண்டுள்ளன. இந்த ரத்தின கற்களில் பல உள்ளன. இவை ஒருவரது அழகை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளையும் கொண்டுள்ளன. ஒருவர் ரத்தின கற்களை அணிவதாக இருந்தால், மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். ஏனெனில் ஒருவர் தவறான ரத்தின கற்களை அணிந்தால், அது வாழ்க்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ரத்தின கற்களை நிறைய பிரபலங்கள் அணிந்துள்ளனர்.

அதுவும் இந்த ரத்தின கற்களின் மீது கோலிவுட்டில் உள்ள பல பிரபலங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் தான் சில பிரபலங்கள் சில ரத்தின கற்களை மோதிரம், வளையல் வடிவில் அணிந்துள்ளார்கள். அதுவும் இப்படியான ரத்தின கற்களை அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஷாருக்கான் முதல் சல்மான் கான் வரை பலர், பல ஆண்டுகளாக தங்கள் கைகளில் அணிந்து வருகின்றனர்.
இதனால் தானோ என்னவோ இன்னும் இவர்கள் திரையுலகில் டாப்பில் உள்ளனர். இப்போது ரத்தின கற்களை அணிந்துள்ள சில பாலிவுட் பிரபலங்களைக் காண்போம். உங்களுக்கு பிடித்த பிரபலம் எந்த ரத்தினக் கல்லை அணிந்துள்ளார் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சல்மான் கான்
நடிகர் சல்மான் கான் தனது கையில் ஒரு டர்க்கைஸ் ரத்தினம் உள்ள வளையத்தை அணிந்திருப்பதை நீங்கள் காணலாம். இந்த ரத்தின கல்லானது இவரது அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஒன்றாக கருதுகிறார். இந்த வளையத்தை சல்மான் கானின் தந்தை தான் பரிசாக வழங்கியுள்ளார். இதுக்குறித்து பல இன்டர்வியூக்களிலும் இவர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடத்தின் படி, இந்த ரத்தினக்கல் நமது உடலில் உள்ள 7 சக்கரங்களுக்கு இடையில் சமநிலையை பேணுகிறது மற்றும் மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. இந்த ரத்தினக்கல் பல வண்ணங்களில் இருந்தாலும், வான நீல நிறம் தான் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த கல்லின் ஸ்பெஷல், இதை அணிந்திருக்கும் போது ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை வரப்போகிறது என்றால் அதன் நிறம் மாறும் அல்லது உடைந்து விடுவதாக கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன்
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் அமிதாப் பச்சன். இவர் தனது வாழ்க்கையில் மோசமான கட்டத்தில் இருக்கும் போது, ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் நீலக்கல் ரத்தினத்தை அணிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கல்லை இவர் அதிர்ஷ்ட கல்லாகவும் கருதுவதாக கூறப்படுகிறது. ஜோதிடத்தில் நீலக்கல் சனி பகவானுக்கு உரியதாக கருதப்படுகிறது. சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை தரக்கூடியவர். இந்த கல்லை அணிந்தால் நோயில் இருந்து விடுபடலாம். கையில் பணம் அதிகம் சேரும் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் கையில் பவளம் மற்றும் முத்து உள்ள மோதிரத்தை அணிந்துள்ளார். மேலும் இதை இவர் தனது அதிர்ஷ்ட பொருளாகவும் கருதுகிறார். இந்த மோதிரத்தை இவர் ஒருபோதும் கையில் இருந்து கழற்றுவதில்லை. ஜோதிடத்தில் பவளம் செவ்வாய் பகவானுக்கு உரியது. இது வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் வெற்றியை நோக்கி கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஏக்தா கபூர்
இயக்குநர் ஏக்தா கபூர் புஷ்பராகம், மரகதம், பவளம் மற்றும் முத்து பதித்த மோதிரங்களை அணிந்துள்ளார். இதில் புஷ்பராகம் குரு பகவானுடன் தொடர்புடையது. மரகதம், புதன் கிரகத்துடன் தொடர்புடையது. அதே சமயம் பவளம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. முத்து சந்திரனுடன் தொடர்புடையது. ஏக்தா கபூர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக கூறப்படுகிறது. இதனால் தானோ என்னவோ, இவ்வளவு ரத்தின கற்களை அணிந்துள்ளார்.
ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் தனது கையில் மரகத கல்லை அணிந்துள்ளார். அதுவும் இதை பல ஆண்டுகளாக அணிந்து வருகிறார். இவர் அணிந்துள்ள மரகம் புதன் கிரகத்துடன் தொடர்புடையது. இந்த ரத்தின கல்லை அணிந்திருப்பவரின் பேச்சுத் திறன் சிறப்பாக இருக்கும். மேலும் இவர் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவார்.
ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி அதிர்ஷ்டத்திற்காக தனது கையில் புஷ்பராகம் ரத்தினத்தை அணிந்துள்ளார். ஜோதிடத்தின் இந்த புஷ்பராகம் ரத்தினக் கல்லானது குரு பகவானுடன் தொடர்புடையது. இந்த கல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த புஷ்பராக ரத்தினத்தை அணிந்திருந்தால், செல்வம் பெருகும். அதே சமயம் பணம் தேடி வந்து, கையில் குவியும்.
ஐஸ்வர்யா ராய்
உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது கையில் நீலக்கல் ரத்தினத்தை அணிந்துள்ளார். அதோடு அவர் ஒரு வைரத்தையும் அணிந்துள்ளார். இதில் நீலக்கல் ரத்தினம் சனி பகவானுடன் தொடர்புடையது. அதே சமயம் வைரம் சந்திரனுடன் தொடர்புடையது. சந்திரன் திரைப்படத் துறை, ஊடகம், நடிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதனால் தானோ என்னவோ, ஐஸ்வர்யா ராய் இந்த ரத்தின கற்களை தனது கையில் அணிந்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான்
நிதானத்தின் உருவகமாக போற்றப்படும் ஒரு பிரபலம் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தனது இசையால் உலக மக்களையே ஈர்த்துள்ளார். அதுவும் இவரது ஒரு பாடல் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருதை கொண்டு வந்தது. தற்பெருமை அதிகம் கொள்ளாமல், தன்னடக்கத்துடனும், எளிமையாகவும் இருக்கும் இவரது குணத்தால் ஏராளமானோரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இப்படிப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்காகவும், தனது கலையில் சிறந்து விளங்கவும் நீலம் ரத்தினக் கல்லை அணிந்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications