Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
உங்களோட பிறந்த மாதம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பெஸ்ட் என்னன்னு சொல்றோம்...
Birth Month And Personality: ஒவ்வொருவருக்குமே தங்களின் குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஒருவரது குணாதிசயங்களை அந்நபரின் பிறந்த தேதி, பிறந்த மாதம், ராசி மற்றும் உடலின் சில உறுப்புக்களின் அளவு, வடிவம் போன்றவை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?
குறிப்பாக ஒருவர் பிறந்த மாதம் அந்நபரைப் பற்றிய பல விஷயங்களைத் தெரியப்படுத்தும். நீங்கள் உங்களின் சிறந்த குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் பிறந்த மாதம் என்னவென்பதைக் கூறி, உங்களின் சிறந்த குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு கூட்டத்தில் தனித்து நிற்பார்கள். மேலும் நீங்கள் கேட்காமலேயே உங்களைச் சுற்றியிருப்பவர்களை உங்களைப் பின்தொடர்வார்கள். ஏனெனில் நீங்கள் மிகவும் அமைதியானவர், சக்தி வாய்ந்த ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள். ஒரு விஷயத்தை திறம்பட செய்து முடிப்பதில் வல்லவர். உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் எளிதில் வழிநடத்துவீர்கள். மொத்தத்தில் சிறந்த தலைமைத்துவ பண்பைக் கொண்டிருப்பீர்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்திருந்தால், ஆழமான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். இரக்கமுள்ள நபர். உங்களைப் பொறுத்தவரை, மற்றவர்களை நேசிப்பதும், அவர்களைக் கவனித்துக்கொள்வதும் உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமைகளில் முதன்மையாக உள்ளது. நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் மென்மை மற்றும் உணர்ச்சிபூர்வமான தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் பாசமுள்ள மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர். கவலையற்றவர் மற்றும் சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள். இதனால் வாழ்க்கையில் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் மீதும் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் உங்களை பிரமிப்புடன் உயிர்ப்பிக்கிறது.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் ஒரு வசீகரமான சக்தியைக் கொண்டவர்கள். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். வசீகரமான அழகைக் கொண்டிருப்பீர்கள். இதனால் இவ்வுலகில் உள்ள அழகான மற்றும் பிரமிக்க வைக்கும் அனைத்திற்கும் நீங்கள் ஒரு காந்தம். உங்கள் ஆற்றல் மறுக்க முடியாதது.
மே
மே மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் கலைநயமிக்கவர்கள். எதையும் கலைநயத்துடன் பார்ப்பீர்கள். மற்றவர்களை பரிசுகளைக் கொடுத்து ஈர்ப்பீர்கள். யாராலும் புறக்கணிக்க முடியாத ஒரு ஆழமான உணர்வைக் கொண்டிருப்பீர்கள். உங்களின் அனுபவங்களை உங்கள் அன்புக்குரியவருடன் மறைக்காமல் பகிர்ந்து கொள்வீர்கள். சில நேரங்களில் இந்த உலகில் உங்கள் நோக்கம் மற்றவர்களுடன் உங்கள் இதயத்தைப் பகிர்ந்து கொள்வதே என்று நீங்கள் உணர்வீர்கள். சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் மிகவும் ரொமான்டிக்கான நபர். மனதளவில் மிகவும் மென்மையான நபர். நீங்கள் காதலிப்பதைப் போன்றே மற்றவர்களையும் காதலிக்க தூண்டுவீர்கள். மிகவும் சென்சிடிவ்வானவர் மற்றும் வெளிப்படையான நபர். மிகவும் கருணை உள்ளம் கொண்ட ஆன்மா. அன்பால் எதையும் செய்ய நினைப்பீர்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் நேர்மையானவர், வெளிப்படையானவர் மற்றும் ஆழ்ந்த அனுதாபம் கொண்டவர். உங்கள் உறவுகளைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நீங்கள் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் விசுவாசமுள்ளவர் மற்றும் கொடையாளர்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்திருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் பிணைப்பை வளர்ப்பதில் வல்லவர். நீங்கள் மிகவும் அன்பான, நல்ல மனிதர். உங்கள் உறவுகளைப் பராமரிக்கவும், உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஆதரிக்கவும், நேர்மையுடன் வழிநடத்தவும், தேவையான இடங்களில் முடிந்தவரை ஆதரவாக இருப்பீர்கள். மேலும் நீங்கள் நம்பகமானவர், எல்லோரிடத்திலும் நல்லதைக் காண்பீர்கள்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலி, ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர். உங்கள் மனம் அசாதாரணமானது, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும். உங்கள் அறிவாற்றலைக் கொண்டு உலகையே மாற்றும் விஷயங்களைச் செய்யும் திறன் உங்களிடம் உள்ளது.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் எதையும் சாதிக்கும் நபர். இலக்கை முடிவு செய்து விட்டால், அதை அடையாமல் ஓயமாட்டீர்கள். உங்களுக்குள் ஒரு பிரமிக்க வைக்கும் விடாமுயற்சி இருக்கும். பெருமைப்படக்கூடிய வாழ்க்கையை உருவாக்க உங்கள் முழு சக்தியையும் செலவிடுவீர்கள். உங்கள் திறன்களில் உங்களுக்கு அசைக்க முடியாத அளவு நம்பிக்கை இருக்கும்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் நீங்கள் இரக்கமுள்ளவராகவும், நேர்மறையாகவும் இருப்பீர்கள். வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு நடக்கவிருக்கும் அனைத்தையும் நீங்கள் மிக ஆழமாக உணர்கிறீர்கள். மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட, நுங்கள் அதிக கருணை உள்ளம் கொண்டவர். வெளிப்படையாக பேசுவீர்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்திருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. நல்ல விஷயங்கள் உங்களைத் தேடி வரும். காதல் விஷயத்திலும், பண விஷயத்திலும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் மனதில் நினைத்து ஆசைப்பட்டாலே, அவை உங்களைத் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











