நீங்க பிறந்த மாதம் என்னன்னு சொல்லுங்க.. நீங்க எந்த நோயால் அதிகம் அவதிப்படுவீங்க-ன்னு சொல்றோம்..

Birth Month And Health: ஒவ்வொருவருக்கும் பிறந்த தேதி மட்டுமின்றி, பிறந்த மாதமும் சற்று ஸ்பெஷலானது தான். சொல்லப்போனால் ஒவ்வொரு ஆண்டில் நுழையும் போதும், அந்த ஆண்டில் வரவுள்ள பிறந்த நாளுக்காக காத்துக் கொண்டிருப்போர் ஏராளம். ஒருவரது பிறந்த மாதமானது அந்நபரைப் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தும்.

முக்கியமாக ஒருவரது பிறந்த மாதம் அந்நபரின் ஆரோக்கியத்தைப் பற்றியும் தெரியப்படுத்தும் என்பது தெரியுமா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், ஒருவர் பிறந்த மாதமானது அந்நபருக்கு எந்த மாதிரியான நோய்கள் வருவதற்கான அபாயம் உள்ளது என்பதைப் பற்றி தெரியப்படுத்துமாம்.

Birth Month And Health What Your Birth Month Says About Your Health

ஒருவர் பிறந்த மாதத்திற்கும், அந்நபருக்கு வரக்கூடிய நோய்களின் அபாயத்திற்கும் இடையேயான தொடர்பை அறிய கொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருத்துவ துறையானது 1.7 மில்லியன் மக்களிடம் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் மிகவும் பொதுவான 55 ஆரோக்கிய பிரச்சனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதேப் போல் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகமும் இதேப்போன்ற ஆய்வை 45,000 பேரிடம் மேற்கொண்டது. ஆய்வின் முடிவைப் பார்த்தால் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. முந்தைய ஆய்வின் முடிவுடன் ஓரளவு ஒத்துப்போனது. இப்போது எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படுவார்கள் என்பதைக் காண்போம்.

ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகம் உள்ளன. மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கார்டியோமயோபதியின் அபாயமும் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் உள்ளன.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களும் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இது தவிர நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் உள்ளன. எனவே நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட பழக்கங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை கைவிட்டு, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இரத்த நாளங்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. முக்கியமாக பெருந்தமனி தடிப்பு நோய் மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. அடிக்கடி மார்பு வலியை அனுபவிக்கக்கூடும். இருந்தாலும், மன அழுத்தத்தை தவிர்ப்பதன் மூலம், இப்படியான நெஞ்சு வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மே

மே மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இவர்கள் வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எப்போதும் பின்பற்றி வந்தால் வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பெரிய ஆரோக்கிய பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பெண்ணாக இருந்தால் கருவுறுதல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது தலைத்தூக்கி கவலை அளிக்கலாம். மேலும் இவர்கள் காலநிலை மாற்றத்தால் அடிக்கடி அழற்சியால் அவதிப்படலாம். அதோடு இவர்கள் அதிகமாக தும்மலாம். மேலும் இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இளம் பருவத்தில் ஆரோக்கியமான இனப்பெருக்க மண்டலத்தைக் கொண்டிருப்பார்கள்.

ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களும் சற்று அதிர்ஷ்டசாலிகள் தான். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு குறிப்பாக எந்த ஒரு பெரிய நோய்களும் தாக்காது. முக்கியமாக இவர்களுக்கு இனப்பெருக்க பிரச்சனைகள் இருக்காது. இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தைக் கொண்டால், நோயின்றி வாழலாம்.

ஆகஸ்ட்

ஆக்ஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியம் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இவர்கள் உடல் மற்றும் மனதளவில் வலுவாக இருப்பார்கள். வலிமையான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதால், இவர்களுக்கு நோய்களின் அபாயம் குறைவு. நன்கு சாப்பிட்டு, சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்தால், ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சுவாசம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. பெண்ணாக இருந்தால், மற்ற மாதங்களில் பிறந்த பெண்களை விட கருவுறுதல் பிரச்சனையை சற்று அதிகமாக சந்திக்கலாம். அதே சமயம் இதய நோயின் அபாயம் இவர்களுக்கு குறைவு.

அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதுவும் சுவாச பிரச்சனைகள், இனப்பெருக்க பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடுவதோடு, ADHD என்னும் கவனத்தை ஒரு வேலையில் செலுத்துவதில் சிக்கலை சந்திக்கலாம். ஆனால் இதய பிரச்சனை தொடர்பாக கவலைப்பட வேண்டியதில்லை. இந்த மாதத்தில் பிறந்தவர்களின் இதயம் வலிமையாக இருக்கும்.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிரச்சனைகள் நிறைய சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக அடிக்கடி மார்பு சளி பிரச்சனையால் அவதிப்பட வேண்டியிருக்கும். மேலும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சியாலும் சிரமப்படலாம். ஆனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு இதய நோயின் அபாயம் குறைவு.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இனப்பெருக்கம் மற்றும் சுவாச ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதால், அனைத்து வகையான நோய்த்தொற்றுகளும் எளிதில் இவர்களை தொற்றும். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion