Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்த 4 மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் ரொம்பவும் அதிர்ஷ்டசாலிங்களாம்..
Birth Month And Best Husband: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருமே நல்லவர்கள் மற்றும் சிறந்தவர்கள் தான். ஆனால் சூழ்நிலைகள் தான் ஒருவர் நல்லவராகவோ, கெட்டவராகவோ வெளிக்காட்டுகிறது. ஒவ்வொருவருமே தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர் அன்பானவராக, அக்கறையுள்ளவராக, நல்லவராக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவோம்.
இருப்பினும் நமது சமுதாயத்தில் ஒருவரது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜோதிடமும் முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்கள் இருக்கும். இதற்கு அந்நபரின் பிறந்த தேதி, பிறந்த மாதம், பிறந்த நேரம் என எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து உங்கள் வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டிருக்கிறீர்களானால், பின்வரும் 4 மாதங்களில் பிறந்த ஆண்களை வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது எந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்கள் என்பதைக் காண்போம்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகச்சிறந்த கணவர்களாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் இயற்கையாகவே மிகவும் விசுவாசமானவர்கள். தனது துணைக்கு துரோகம் செய்ய கனவிலும் நினைக்கமாட்டார்கள். மேலும் சிறு பொய்களை கூட சொல்லமாட்டார்கள். ஏனெனில் இவர்களுக்கு உறவின் அருமை நன்கு தெரியும். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் எந்த ரகசியத்தையும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். தனது துணையிடம் அனைத்தையும் வெளிப்படையாக கூறிவிடுவார்கள். தனது வாழ்க்கைத் துணைக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். தனது துணையின் எதிர்பார்ப்பை சொல்லாமலேயே புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். முக்கியமாக மிகவும் ரொமான்டிக்கானவர்கள்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்களும் நம்பமுடியாத அளவில் மிகச்சிறந்த கணவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். நிறைய பேரிடம் இப்பழக்கம் இல்லை. மேலும் இவர்கள் தனது துணை பேசும் போது அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அதற்கேற்ப நடப்பார்கள். உணர்வுகளை அதிகம் மதிப்பார்கள். என்ன தான் நீங்கள் தவறு செய்தாலும், உங்கள் பக்கத்தில் இருந்து யோசித்து சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வார்கள். எவ்வளவு தான் கடினமாக நடந்து கொண்டாலும், அதை பெரிய விஷயமாக கருதி குற்றம் சாட்டமாட்டார்கள். மென்மையான இதயத்தைக் கொண்டவர்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் ஒருபோதும் சிரமப்படமாட்டார்கள். மேலும் இவர்கள் தனது துணை ஒரு வேலையை செய்ய சொல்வதற்கு முன்பே அதை புரிந்து கொண்டு செய்துவிடுவார்கள். தனது துணையின் தேவையை சொல்லாமலேயே புரிந்து நடந்து கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் என்பதால் கொஞ்சம் கூடுதல் அன்பை எதிர்பார்ப்பார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள். அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். தனது வாழ்க்கைத் துணையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள். தனது துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலவென்று இருக்கும். இவர்கள் தனது துணைக்கு வேண்டியதை சொல்லாமலேயே புரிந்து கொண்டு செய்வார்கள். அனைத்து வகையிலும் தனது வாழ்க்கை துணைக்கு ஆதரவாக இருப்பார்கள் மற்றும் அவரது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











