Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தந்தையர் தினத்தில் உங்க அப்பாவுக்கு எந்த மாதிரியான பரிசுகளை வழங்கலாம் தெரியுமா?
Father's Day 2023: ஒரு அப்பாவின் அன்பு என்பது அளவு கடந்த ஒன்று. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அப்பாவின் பங்கு மிகப் பெரியது. தன்னுடைய குழந்தைக்கு தன்னலமற்ற தோழமையை தருவதில் அப்பாவுக்கு நிகர் எவரும் கிடையாது. தந்தையின் தியாகம் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
அத்தகைய அப்பாவின் அன்பை கொண்டாட சரியான நாள் தான் இந்த தந்தையர் தினம்.இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை மகிழ்ச்சியாக வைப்பது உங்களது கடமை. உங்கள் தந்தைக்கு இந்த நன்னாளில் நிறைய பரிசுப் பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். அந்த வகையில் இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவுக்கு எந்த மாதிரியான பரிசுப் பொருட்களை பரிசளிக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஃபயர் டீவி க்யூப்
உங்கள் தந்தைக்கு ஒரு ஃபயர் டீவி க்யூப் (fire TV cube) யை பரிசாக வழங்கலாம். இப்பொழுது இந்த க்யூப் நிறைய வசதிகளுடனும் அலெக்ஸா அம்சங்களுடனும் வருகிறது. இதன் வழியாக உங்கள் தந்தைக்கு பிடித்தமான படங்கள் மற்றும் பாடல்களை கேட்க முடியும். எனவே இந்த தந்தையர் தினத்தில் ஒரு தொழில் நுட்ப ஃபயர் டீவி க்யூப்பை நீங்கள் பரிசளிக்கலாம்.
ப்ளூடூத் ஸ்பீக்கர்
உங்கள் தந்தைக்கு ஒரு போர்ட்டபிள் ஸ்பீக்கரை நீங்கள் பரிசளிக்கலாம். இதன் மூலம் அவர் எளிதாக இசையை கேட்க முடியும். இப்பொழுது விலை குறைந்த விலையில் ஏகப்பட்ட ஸ்பீக்கர் அம்சங்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கரை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் முடியும்.
ஏர் பேட்ஸ்
ஏர் பேட்ஸ் பிடிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. உங்கள் தந்தைக்கு நீங்கள் ஏர் பேட்ஸ்யை பரிசாக வழங்கலாம். இது அவருக்கு ஒரு நல்ல இசை விருந்தாக அமைய வாய்ப்பு உள்ளது. தற்போது நிறைய அம்சங்களுடன் கூடிய ப்ளூடூத் ஏர் பேட்கள் ஆன்லைனில் கிடைக்கிறது. அதை வாங்கி மகிழுங்கள்.
காபி மேக்கர்
காபி மேக்கர் ஒரு சிறந்த கிஃப்ட் ஆகும். உங்கள் தந்தை ஒரு காபி விரும்பி என்றால் இந்த பரிசு அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். எனவே உங்கள் தந்தைக்கு ஒரு சிறந்த காபி மேக்கரை நீங்கள் பரிசாக வழங்கலாம். இதன் மூலம் அவர் விரும்பும் சமயத்தில் காபியை தயார் செய்து கொள்வார்.
அழகான காபி கோப்பை
உங்கள் தந்தை ஒரு சிறந்த தந்தை என பறைசாற்றும் விதத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் உள்ள காபி கோப்பையை உங்கள் தந்தைக்கு நீங்கள் பரிசளிக்கலாம். உங்கள் தந்தையின் புகைப்படத்தை அச்சிட்ட காபி கோப்பையையும் உங்கள் தந்தைக்கு பரிசாக வழங்கலாம். இருவரும் இணைந்து அந்த காபி கோப்பையில் காபி குடிக்கும் தருணங்கள் அழகானது.
டி-ஷர்ட்டை பரிசளியுங்கள்
உங்கள் தந்தைக்கு பிடித்தமான நிறத்தில் ஒரு அழகான டி-ஷர்ட்டை பரிசளிக்கலாம். அதில் சிறந்த தந்தை மற்றும் அன்பான தந்தை போன்ற வாசகங்களுடன் எழுதப்பட்ட டி-ஷர்ட்டை நீங்கள் அவருக்கு பரிசளிக்கலாம்.
அழகான பர்ஸை பரிசளியுங்கள்
உங்கள் தந்தைக்கு எதாவது உபயோகப்படுகிற மாதிரி ஒரு பரிசை நீங்கள் வழங்க விரும்பினால் அழகான பர்ஸை வழங்குங்கள். இதில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற முடியும். உங்கள் தந்தையின் புகைப்படம் இட்ட பர்ஸை அவர்களுக்கு நீங்கள் வழங்கலாம்.
சமைப்பதற்கு பயன்படுத்தும் மேல் ஆடை
உங்கள் தந்தைக்கு சமையல் என்பது மிகவும் பிடித்தமான விஷயம் என்றால் அவர் சமைக்கும் போது பயன்படுத்த ஏதுவான மேல் ஆடையை நீங்கள் வழங்கலாம். இது சமையலின் போது அவர் ஆடை அழுக்காகாமல் இருக்க உதவுகிறது.
சாண்ட்விச் மேக்கர்
உங்கள் தந்தைக்கு சிறந்த காலை உணவை தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் சிறந்த சாண்ட்விச் மேக்கரை நீங்கள் வாங்கி கொடுக்கலாம். இந்த சாண்விட்ச் மேக்கர் மூலம் உங்கள் தந்தை அவருக்கு தேவையான காலை உணவை அவரே தயாரித்துக் கொள்வார்.
தந்தையர் தின அட்டை
உங்கள் அன்பு மற்றும் பாசத்தை உங்கள் கவிதை நடையில் எழுதி அந்த வாழ்த்து அட்டையை இந்த தந்தையர் தினத்தில் அவருக்கு பரிசாக வழங்கலாம். இது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பரிசாக அமையும். இந்த தந்தையர் தினத்தை உங்கள் அப்பாவுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர் மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications