Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த வேலை செஞ்சா கொடி கட்டி பறப்பீங்க-ன்னு சொல்றோம்...
Best Careers As Per Zodiac Signs In Tamil: நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவு இருக்கும். அந்த கனவை நனவாக்க நாமும் முயற்சிப்போம். முக்கியமாக தொழில் என்று வரும் போது அனைவருக்குமே ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருமே தங்களுக்கு பிடித்த வேலையைத் தான் செய்கிறோமா என்ன? நாம் என்ன தான் ஆசைப்பட்டாலும், நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றையும் கிரகங்கள் தான் தீர்மானிக்கின்றன.
ஒருவர் பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவரது ராசி தீர்மானிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு அதிபதிகளைக் கொண்டுள்ளன. அந்த அதிபதிகளின் குணங்களுக்கு ஏற்ப, அந்த ராசியைச் சேர்ந்தவர்களின் குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒருவது ராசி அந்நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒருவர் வேலையில் கொடிகட்டிப் பறக்க நினைத்தால், தங்கள் ராசிக்கேற்ற சிறந்த தொழிலை தேர்வு செய்து அதில் முயற்சித்தால், விரைவில் முன்னேற்றத்தைக் காணலாம். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் தைரியமானவர்கள் மற்றும் சாகசத்தை அதிகம் விரும்புவார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு சேல்ஸ், மார்கெட்டிங் அல்லது விருப்பமான விளையாட்டு போன்றவற்றில் தங்கள் தொழிலை அமைத்துக் கொண்டால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் விவேகமானவர்கள். இவர்கள் பணத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதில் கில்லாடிகள். இந்த ராசிக்காரர்களுக்கு வங்கி, நிதி அல்லது ரியல் எஸ்டேட் போன்றவற்றில் தொழிலை அமைத்துக் கொண்டால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வலுவான தகவல்தொடர்பு திறன் கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பத்திரிக்கை, எழுத்து, நடிப்பு அல்லது மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் தொழிலை அமைத்துக் கொண்டால், சிறந்து விளங்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் இரக்ககுணமுள்ளவர்கள். இந்த ராசிக்காரர்கள் நர்சிங், சமூக பணி, மருத்துவம், ஆலோசனை போன்றவற்றுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் நம்பிக்கையானவர்கள் மற்றும் விசுவாசமானவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தலைமை பாத்திரங்கள், பொழுதுபோக்கு, நிகழ்வு மேலாண்மை, ஃபேஷன் மற்றும் டிசைனிங் போன்றவற்றில் தொழிலை அமைத்துக் கொண்டால், கொடிகட்டி பறக்கலாம்.
கன்னி
புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் நன்கு பகுப்பாய்வு செய்வார்கள், ஒழுங்காக எதையும் செய்யக்கூடியவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு எடிட்டிங், எழுதுவது, பகுப்பாய்வு, கணக்கியல், பொறியியல் மற்றம் தொழில்நுட்பம் போன்றவற்றில் தொழிலை அமைத்துக் கொண்டால், வாழ்வில் சிறந்து திகழலாம்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் வசீகரமானவர்கள் மற்றும் ராஜதந்திர திறன்களைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் சட்டம், நிகழ்வு திட்டமிடல் போன்ற துறையில் தொழிலை அமைத்துக் கொண்டால், செழித்து வளரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கையானவர்கள் மற்றும் சாககத்தை விரும்புவார்கள். இவர்கள் பத்திரிக்கை, துப்பறியும் வேலை, ஆராய்ச்சி, உளவியலாளர்கள், சிகிச்சையாளர்கள் போன்ற துறைகளில் தொழிலை அமைத்துக் கொள்வது விரைவில் முன்னேற்றத்தைக் காண வழிவகை செய்யும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பயணம் பற்றிய ழுத்து, ஆய்வு, கற்பிப்பது, தத்துவம், சட்டம் மற்றும் ஆலோசனை போன்றவற்றில் தொழிலை அமைத்துக் கொண்டால், நல்ல பலனைப் பெறலாம்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் எதையும் முழு அர்ப்பணிப்புடன் செய்யக்கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகள், மேலாளர்கள், நிர்வாகிகள், வங்கியாளர்கள், கட்டிட கலைஞர்கள், அரசியல் வாதிகள், பொறியாளர்கள் போன்றவற்றில் வேலை செய்தால், முன்னேற்றத்தைக் காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புதுமையான மற்றும் முன்னோக்கிய சிந்தனை கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தொழில்நுட்பம், சமூக செயல்பாடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் இருந்தால், செழித்து வளரலாம்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் அதிக ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிகிச்சையாளர்கள், ஆன்மீகவாதிகள், உளவியலாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவம் போன்ற தொழில்களை தேர்வு செய்தால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications