Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
பல்லி பொதுவாக வீடுகளில் காணப்படும். வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர். பல்லிகள் பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. இது விஷப்பூச்சி, அதாவது உண்ணாமல், வீட்டில் சுற்றித் திரியும், அதனால் எந்த உணவில் சிக்கினாலும், அதை உண்பவர்கள் இறந்துவிடுவார்கள் என்ற கட்டுக்கதை மக்களிடையே உள்ளது. அதே போல நம் உடம்பில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதை அறியும் பல்லி விஞ்ஞானமும் உண்டு.
இந்து மரபுகளின்படி, பல்லி நம் மீது விழுந்தால், அது பாவமாக கருதப்பட்டு தலைக்கு குளிக்கப்படுகிறது. முடியாவிட்டால் குறைந்த பட்சம் மஞ்சள் நீராவது தெளித்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் காஞ்சியில் கோவிலில் உள்ள தங்க பல்லியை தொட்டு வணங்கினால் தோஷங்கள் விலகும் என்பார்கள்.. மேலும் உடலின் எந்த பகுதியில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. தலையில் பல்லி விழுந்தால்
ஒரு பெண்ணின் தலையில் பல்லி விழுந்தால், அது உயிருக்கு ஆபத்தானது மற்றும் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு, தலையில் விழுந்தால், உங்களுடன் சண்டையிட யாராவது தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
2. பெண்களின் காதுகள்
பெண்களுக்கு, காதுக்கு அருகில், கன்னத்திற்கு அருகில் விழுந்தால் எல்லாமே சுபம் என்று அர்த்தம்..
3. கை
பல்லி உள்ளங்கையில் விழுந்தால் பண ஆதாயம் கிடைக்குமாம்.. முழங்கையில் விழுந்தால் உதவியற்ற தன்மையாக இருப்பீர்கள் என்று அர்த்தம்.. மணிக்கட்டுக்கு அருகில் விழுந்தால் பெருமையின் தொந்தரவு, நகங்களில் விழுந்தால் விலங்கு பயம் நீங்குமாம்.. அக்குளில் விழுந்தால் பேய் பயமும் முதுகில் விழுந்தால் பகையும் தான் அதிகரிக்கும்..
4. வலது கன்னத்தில்
பெண்ணின் வலது கன்னத்தில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். ஆண்களுக்கு வலது கன்னத்தில் பல்லி விழுந்தால் கெட்ட செய்தி வரும்.
5. வலது காது
ஒரு பெண்ணின் வலது காதில் பல்லி விழுந்தால், அவளுக்கு ஒரு அதிர்ஷ்ட பரிசு வழங்கப்படும்.
6. மேல் உதட்டில்
ஒரு பெண்ணின் மேல் உதட்டில் பல்லி விழுந்தால், அவள் ஒருவருடன் சண்டையிடத் தயாராக இருக்கிறாள் என்பதற்கான அறிகுறியாகும். அது ஆண் மீது விழுந்தால் அதையே குறிக்கும்.
7.இடது கை அல்லது இடது கால் நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.
8. தொடை
பல்லி தொண்டையின் மேல் விழுந்தால், அந்நபர் பல்வேறு நன்மைகளைப் பெறுவதோடு, எதிரிகளை கீழே வீழ்த்துவார்.
9. பாதத்தில் பல்லி விழுந்தால்
பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.
10. மார்பு மீது பல்லி விழுதல்
வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.
11. கழுத்தில் பல்லி விழுந்தால்
இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.



Click it and Unblock the Notifications
