Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிக்கு விடுமுறையா? அது எப்படி?
செப்டம்பர் மாதத்தில் 2024 விழாக்கள், ஆன்மீக விஷேசங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் என தொடர்ந்து வருகின்றன.. அதுமட்டுமல்லாமல் இந்த மாதத்தில் மொத்தம் 2 சனிக்கிழமைகள் மற்றும் 5 ஞாயிறுக்கிழமைகள் விடுமுறையாக வருகின்றன.. அதன் காரணத்தால் விடுமுறை நாட்களளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த 15 நாட்கள் நாடு முழுவதும் விடுமுறையாக இருக்காது.. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுப்படும்..
இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறும்.. இதற்கு காரணம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட விழாக்கள், பாரம்பரியம், கலாச்சாரம் இருக்கும். இதனால் பிராந்திய அடிப்படையில் இந்த விடுமுறை மாறுகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 2024 உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி பணிகள் இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே உள்ளூர் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொண்டு வங்கி பணிகளை செய்வது நல்லது..

இந்நிலையில், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாள்காட்டி 2024ன் படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். குறிப்பாக, சில நீண்ட வார இறுதி விடுமுறைகளும் உள்ளன, அதனால் வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால் இந்த விடுமுறை பட்டியலுக்கு ஏற்ப திட்டமிட்டுக்கொள்ளவும் என அறிவித்துள்ளது..
வங்கி விடுமுறை முழு பட்டியல் இதோ
செப்டம்பர் 1 - ஞாயிறு - இந்தியா முழுவதும் விடுமுறை
செப்டம்பர் 7 - விநாயகர் சதுர்த்தி - இந்தியா முழுவதும் விடுமுறை
செப்டம்பர் 8 - ஞாயிறு / நுவாகை - இந்தியா முழுவதும் / ஒடிசா
செப்டம்பர் 13 - ராமதேவ் ஜெயந்தி / தேஜா தசமி (வெள்ளிக்கிழமை) - ராஜஸ்தான்
செப்டம்பர் 14 - இரண்டாவது சனிக்கிழமை / ஓணம் - இந்தியா முழுவதும் கேரளா
செப்டம்பர் 15 - ஞாயிறு / திருவோணம் - இந்தியா முழுவதும் / கேரளா
செப்டம்பர் 16 - ஈத் எ மிலாத் (திங்கட்கிழமை) - இந்தியா முழுவதும் விடுமுறை
செப்டம்பர் 17 - இந்திர ஜாத்ரா (செவ்வாய்) - சிக்கிம்
செப்டம்பர் 18 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (புதன்கிழமை) - கேரளா
செப்டம்பர் 21 - ஸ்ரீ நாராயண குரு சமாதி (சனிக்கிழமை) - கேரளா
செப்டம்பர் 22 - ஞாயிறு - இந்தியா முழுவதும் விடுமுறை
செப்டம்பர் 23 - Heroes' Martyrdom Day (திங்கட்கிழமை) - ஹரியானா
செபம்பர் 28 - நான்காவது சனிக்கிழமை - இந்தியா முழுவதும் விடுமுறை
செப்டம்பர் 29 - ஞாயிறு - இந்தியா முழுவதும் விடுமுறை
தமிழ்நாட்டில் செப்டம்பர் 7, 14, 16, 28 ஆம் தேதிகளில் மட்டுமே விடுமுறை, இதனுடன் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications