Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்கள் கனவில் ராமர் வருகிறாரா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
Ayodhya Ram Mandir: ஒருவர் தூங்கும் போது கனவு காண்பது என்பது சாதாரணமான ஒன்று. தூக்கத்தில் காணும் கனவுகள் ஒருவரது ஆழ்மனதில் உள்ள ஆசை அல்லது விருப்பத்தைப் பொறுத்தது. இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கனவுகள் வரக்கூடும்.
ஃகனவு சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு வரும் கனவுகளானது அந்நபருக்கு வரவிருக்கும் நல்லது அல்லது கெட்டதைக் குறிக்கலாம். சிலருக்கு கனவில் விலங்குகள், பறவைகள் வரலாம். இன்னும் சிலருக்கு கடவுள்கள் கூட வரலாம்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராம பக்தர்கள் பலரும் தங்கள் மனதில் ராம நாமத்தை ஜெபித்தவாறு இருப்பார்கள்.
பொதுவாக ராமரின் நாமத்தை சொன்னாலே வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் வரும் என்பது நம்பிக்கை. ஒருவேளை ராமர் ஒருவரது கனவில் வந்தால், அதற்கு ஒருசில அர்த்தம் உண்டு. உங்கள் கனவிலும் ராமர் அல்லது ராமர் கோவில் வந்தால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை இப்போது காண்போம்.
கனவில் ராமர் வந்தால் என்ன அர்த்தம்?
ஒருவரது கனவில் ராமர் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை விரைவில் பெறப் போகிறீர்கள். அதே சமயம் உங்களின் கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதையும் ராமர் உணர்த்த வருகிறார் என்றும் அர்த்தம்.
கனவில் ராமர் கோயில் வந்தால் என்ன அர்த்தம்?
ஒருவரது கனவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் வந்தால், அது அந்நபரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான கனவு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையப் போகிறது என்பதையும் குறிக்கிறது. அதோடு வாழ்வில் உள்ள தடைகளை நீங்கி, உங்களின் இலக்குகளை விரைவில் அடைவீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.
ராமருடன் அனுமன் வந்தால் என்ன அர்த்தம்?
ஒருவரது கனவில் ராமருடன் அனுமனும் வந்தால், அது அந்நபருக்கு விரைவில் ஒரு பெரிய ஜாக்பாக் அடிக்கப் போகிறது என்பதைக் குறிக்கிறது. மேலும் இந்த மாதிரியான கனவு கஷ்டங்களை ராமர் போக்கப் போகிறார் என்பதையும் உணர்த்துகிறது. நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனையில் சிக்கி தவித்து வந்தால், ராமரின் அருளால் அந்த பிரச்சனை தீரப் போகிறது என்றும் அர்த்தம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications