Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக இன்று அயோத்தியில் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய ஒரு ஸ்தலமாக அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் போன்ற பலருக்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தன. அவர்களுள் பலர் இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏற்கனவே அயோத்திக்கு வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.
வட இந்தியாவில் நடக்கும் இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு, தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பட்டுள்ளன. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராம் சரண், சிரஞ்சீவி, பவன் கல்யாண், மற்றும் ரிஷப் ஷெட்டி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகமானது நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி தலைமையிலும், முன்னிலையிலும் மதியம் 12.20 மணிக்கு உற்சாகமாக தொடங்கியுள்ளது. இப்போது இந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரபலங்களைக் காண்போம்.
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்
பாலிவுட் நடிகர்களாக அமிதாப் பச்சன் மற்றும் அபிஷெக் பச்சன் அவர்கள் ராமரின் பிறப்பிடமான அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் வெள்ளை நிற குர்தா-பைஜாமா மற்றும் ஷால் அணிந்திருந்தனர்.
ரன்பீர் மற்றும் ஆலியா, விக்கி மற்றும் கத்ரீனா, ஆயுஷ்மான் குர்ரானா
பாலிவுட்டின் பிரபலமான தம்பதிகளான ரன்பீர் கபூர்-அலியா பாட், விக்கி கௌஷல்-கத்ரீனா ஆகியோரும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஜோடியாக வந்திருந்தனர். இது தவிர நடிகர்களான ஆயுஷ்மான் குரானா, விவேக் ஓபராய், மாதுரி தீட்சித் ஆகியோருடன், திரைப்பட தயாரிப்பாளர்களான மதுர் பண்டார்கர், ராஜ்குமார் ஹிரானி மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி
டோலிவுட் நடிகர்களான ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் இருந்து அயோத்திக்கு தனி விமானத்தில் வந்தனர்.
ரஜினிகாந்த் மற்றும் தனுசு
உலகளவில் பிரபலமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் அவர்களும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். இவ்விரு நடிகர்களும் நேற்றே சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டுள்ளனர்.
கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் ஞாயிற்று கிழமையே அயோத்தியை வந்தடைந்து, அங்கு கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதுவும் இவர் ஹனுமான் கர்ஹி கோயிலின் தரையை சுத்தம் செய்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி
கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியும் தனது மனைவியுடன் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷெகத்தில் கலந்து கொண்டுள்ளார்.
பவன் கல்யாண்
தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அவர்களும் அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அயோத்திக்கு சென்றுள்ளார்.



Click it and Unblock the Notifications