Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது!
ராம நவமி நாளில் நிகழும் அரிய நிகழ்வு: இந்த 3 ராசிக்காரங்க ராமரின் அருளால் பண மழையில் நனையப்போறாங்க..
Auspicious Yog Formed On Ram Navami 2024: இந்து நாட்காட்டியின் படி, ஒவ்வொரு ஆண்டும் ராம நவமியானது சித்திரை மாத வளர்பிறையில் வரும் நவமி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
வால்மீகி ராமாயணத்தின் படி, ராமர் கடக ராசி மற்றும் அபிஜீத் முஹூர்த்தத்தில் பிறந்தார். இந்த ராம நவமி நாளில் இந்தியாவில் உள்ள ராமர் கோவில்கள் மற்றும் அனுமன் கோவில்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆடம்பரத்துடன் கொண்டாடப்படும்.

ஜோதிடத்தின் படி, வருகிற ராம நவமியானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாளில் உருவாகும் சில மங்களகரமான யோகங்கள் மற்றும் நிகழ்வுகள், ராமர் பிறக்கும் போது நிகழ்ந்தன. இதனால் இந்த ஆண்டின் ராம நவமியானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்கள் ராமரின் அருளைப் பெறவுள்ளார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டின் ராம நவமி நாளில் சந்திரன் கடக ராசியில் இருப்பார். மேலும் ராமர் பிறந்த போது சூரியன் 10 ஆவது வீட்டில் இருந்தார். அதேப் போல் இந்த ஆண்டின் ராம நவமி நாளில் சூரியன் 10 ஆவது வீட்டில் இருப்பார். அதோடு கஜகேசரி யோகமும் உருவாகவுள்ளது. ராமர் பிறந்த போது, அவருடைய ஜாதகத்தில் கஜகேசரி யோகம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த யோகத்தால் நல்ல புகழும், மரியாதையும் கிடைக்கும். இப்போது ராம நவமி நாளில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ராம நவமி நாளில் ராமரின் அருளால் பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவார்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலர் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ராமரின் அருளால் நிதி நிலை வலுவடையும். கடன் சுமை குறையும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ராம நவமி நாளில் ராமரின் அருளைப் பெற்று, நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முக்கியமாக முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
துலாம்
ராம நவமி நாளில் ராமரின் ஆசியால் துலாம் ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். ராமரின் அருளால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலைமை எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றத்தை அடையும். நிறைய பயணத்தை சேமிக்க முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications