Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
சிம்மத்தில் செவ்வாய்-சுக்கிரன்: 100 ஆண்டுகளுக்கு பின் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..!
Mars Venus Conjunction 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களினால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். சில சமயங்களில் சில ராஜயோகங்கள் பல ஆண்டுகள் கழித்து உருவாகலாம். அப்படி உருவாகும் ராஜயோகங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2023 ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளளது. சிம்ம ராசியில் செவ்வாயும், சுக்கிரனும் மைய முக்கோண ராஜயோகத்தை உருவாகியுள்ளனர்.

இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் முன்னேற்றமும், அனைத்து காரியங்களிலும் வெற்றியும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மைய முக்கோண ராஜயோகமானது அட்டகாசமான பலன்களை அளிக்கவுள்ளது. ஏனெனில் இந்த சேர்க்கையானது 11 ஆவது வீட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் இக்காலத்தில் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அதோடு ஆளுமையில் நல்ல மாற்றம் தெரியும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
சிம்மம்
சிம்ம ராசியின் லக்ன வீட்டில் மைய முக்கோண ராஜயோகம் உருவாகியுள்ளதால், பல நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதோடு வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. வீடு, நிலம் மற்றும் வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அதை இக்காலகட்டத்தில் வாங்க முடிவு செய்வீர்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மைய முக்கோண ராஜயோகத்தால் நல்ல காலம் தொடங்குகிறது. எதிர்பாராத வழிகளில் நல்ல பண வரவைப் பெறுவீர்கள். மேலும் இக்காலத்தில் உங்கள் பேச்சு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் பேச்சால் மற்றவர்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
இதுவரை குடும்ப உறுப்பினர்களுடன் ஏதாவது மனக்கசப்புகள் இருந்தால், அது நீங்கி, அவர்களுடனான உறவு மேம்படும். திருமணமானவர்கள் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக இந்த ராஜயோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications