August Horoscope 2023: ஆகஸ்ட் மாசம் இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப் போகுது...

August 2023 Monthly Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

கீழே 12 ராசிக்காரர்களும் ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

August 2023 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். சில சமயங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இன்னும் சில சமயங்களில் பெரிய ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

வணிகர்கள் கூட்டு வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தினால் நற்பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் குடும்பத்தினருடன் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இந்ம மாதத்தில் நல்ல வரன் தேடி வரும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் மிகவும் பிஸியாக இருப்பார்கள்.

நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய செலவை வைத்துவிடும். நிதி ரீதியாக, இம்மாதம் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காணலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.

நிதி நிலை வலுலாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும், சேமிப்பிலும் கவனம் செலுத்துவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். பணிபுரிபவர்கள் திடீர் வேலைப்பளுவால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, செலவுகள் அதிகமாக இருக்கும்.

குழந்தைகளின் படிப்புக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாத இறுதியில் திடீர் உடல்நலக் குறைவால் உங்களின் சில திட்டங்களில் தடைகள் ஏற்படலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். அன்புக்குரியவர்களுடனான உறவில் கசப்பு ஏற்படலாம். இம்மாதத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இதனால் உங்களின் வேலை பாதிக்கப்படக்கூடும்.

வணிகர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும். பட்ஜெட் சமநிலையற்றதாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது வேலையை பொறுத்தவரை நன்றாக இருக்கும். வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய வேலையில் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், வேலையை மாற்ற இதுவே சரியான நேரம்.

உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் அன்புக்குரியவரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அலட்சியமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் வேலை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் கடினமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில், கடந்த காலத்தில் செய்த கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வியாபாரிகள் இம்மாதத்தில் கடின உழைப்பால் நல்ல லாபத்தைப் பெற முடியாது. பங்குச் சந்தையில் பணிபுரிந்தால், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பந்தமான எந்த ஒரு முக்கியமான வேலையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் கஷ்டங்கள் அதிகரிக்கலாம். வேலையையும் இழக்க நேரிடலாம். ஆனால் தொழிலதிபர்களுக்கு நன்றாக இருக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பும் கிடைக்கும்.

குடும்ப சண்டைகள் நீங்கும். உறவுகள் மேம்படும். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த மாதத்தில் பண இழப்புக்களை சந்திக்கக்கூடும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது வேலையைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல பண ஆதாயத்தைப் பெறுவார்கள். விரைவான லாபம் ஈட்டுவதற்காக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் சற்று சுமாராகவே இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தாயின் உடல்நிலை குறித்து மிகவும் கவலை கொள்வீர்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பிஸியான மாதமாக இருக்கும்.

வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது வியாபாரிகளுக்கு கலவையானதாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள், லாபத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

பணிபுரிபவர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும். பல முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு இருந்தபோதிலும், நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது. ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைத் தரும். அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும். வேலையை விடாமுயற்சியுடன் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் நிதி நெருக்கடியிலிருந்து விடுபடுவார்கள். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பழைய கடனில் இருந்து விடுபடலாம். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான வலுவான வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, July 29, 2023, 8:50 [IST]
Desktop Bottom Promotion