Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது... உங்க ராசியும் இதுல இருக்கா?
August 2023 Horoscope: 2023 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறைய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றங்களினால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கங்கள் தெரியும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியிருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது மிகவும் சாதகமாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப் போகிறது.

கீழே ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறப் போகிறார்கள் என்பது குறித்த கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணத்தை சேமித்து வைத்தால், எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கலாம். காலநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல வரன் கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும். திடீரென்று கையில் பணம் அதிகம் சேரும்.
இம்மாதத்தில் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும், பொறுமையாக கையாண்டால், நல்ல தீர்வு காணலாம். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் மாதமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை, நன்றாக மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக, இம்மாதத்தில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காணக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வெற்றியை அள்ளித் தரும். புத்திசாலித்தனத்தால் தங்கள் வேலைகளை எளிதில் செய்து முடிப்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் குருவின் அருளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். வேலையில் அதிக கவனத்தை செலுத்துவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications