Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
August 2023 Career Horoscope: கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படுகிறது. அதுவும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன.
எனவே தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட காலத்தில் மாற்றங்களைக் காண நேரிடும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கியமான கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன. இதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஆகஸ்ட் மாதமானது மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலையில் நல்ல வெற்றியும் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
இதனால் இந்த மாதம் தொழில் ரீதியாக மட்டுமின்றி, நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் இம்மாதத்தில் தேடி வரும். கடற்படை, காவல் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். சனி பகவான் இம்மாதத்தில் உங்களை நிறைய வேலையை செய்ய வைப்பார். குருவின் நிலையால் பல நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் இம்மாதத்தில் நிறைய லாபத்தை பெறுவார்கள். அலுவலகத்தில் உங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். குருவின் நிலையால் பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் திட்டமிட்டு தங்கள் வேலைகளை செய்வார்கள். இதனால் நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும் மற்றும் அந்த வேலையும் வெற்றிகரமாக முடிக்கப்படும். குருவின் பார்வையால் வேலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அற்புதமாக இருக்கும். தொழிலில் பல நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை ஆர்வமாகவும், சிறந்த செயல்திறனுடனும் செய்வீர்கள். இதனால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். முக்கியமாக ஆகஸ்ட் மாதத்தில், உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களின் ஆசைகள் நிறைவேறும். வேலையில் உங்களின் முழு திறமைகளையும் வெளிக்காட்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
இதனால் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு இம்மாதம் லாபகரமானதாக இருக்கும். மாத இறுதியில் நல்ல வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களுடன் போட்டி போட்டு எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications