உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

தற்போதைய பிஸியான உலகில், மக்கள் பணத்தை சம்பாதிக்கவும், வாழ்வில் வெற்றி பெறவும் இரவும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அனைவருக்குமே தங்களின் கடின உழைப்புக்கான பலன் உடனே கிடைத்துவிடுவதில்லை. சிலர் எவ்வளவு முயற்சித்தாலும், தோல்வியையே பெறுவார்கள்.

மேலும் வாழ்க்கையே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் இன்னும் சிலரைப் பார்த்தால், எவ்வித சிரமமும் இல்லாமல் வெற்றி மேல் வெற்றி காண்பார்கள். வாழ்க்கை பிரகாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இதற்கு ஒருவரது அதிர்ஷ்டம் தான் முக்கிய காரணம். இந்த அதிர்ஷ்டமானது ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைப் பொறுத்தது.

At What Age Your Luck Will Shine According To Astrology In Tamil

ஜோதிடத்தில் உள்ள ஒன்பது கிரகங்களுமே ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவருக்கு நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது. அதுவும் கிரகங்கள் குறிப்பிட்ட வீடுகளில் இருக்கும் போது, ஒருவரது அதிர்ஷ்டம் சூரியனைப் போல பிரகாசிக்கும். சரி, ஒருவரது அதிர்ஷ்டத்திற்கு எந்த கிரகம் எந்த வீட்டில் இருக்க வேண்டும் மற்றும் ஒருவருக்கு எந்த வயதில் அதிர்ஷ்ட காத்து அடிக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை இப்போது காண்போம்.

9 ஆவது வீடு அதிர்ஷ்ட வீடு

ஜோதிடத்தில் உள்ள 12 வீடுகளில் ஒவ்வொன்றுமே ஒருவரது வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் 9 ஆவது வீடு ஒருவரது அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் 9 ஆவது வீடு விதியின் வீடு.

எனவே இந்த 9 ஆவது வீட்டில் இருக்கும் கிரகங்கள் மற்றும் இந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்கள், ஒருவரது அதிர்ஷ்டத்தைப் பற்றி வெளிப்படுத்தும். இந்த வீட்டில் இருக்கும் குறிப்பிட்ட கிரகங்களினால் சிலர் இளம் வயதிலேயே அதிர்ஷ்டத்தின் ஆதரவால் சமூகத்தில் நல்ல நிலையில், பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் சில கிரகங்களால் 35 வயதிற்கு மேல் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

எந்த கிரகம் 9 ஆவது வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்?

ஜோதிடத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் இருக்கும் அல்லது அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களைப் பொறுத்து, அந்நபரின் தலைவிதி பாதிக்கப்படும். 9 ஆவது வீட்டில் இருக்கும் கிரகங்கள் ஒருவரது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றின் காலத்தை கணக்கிடுவதற்கு பொறுப்பாகும். எனவே இந்த வீட்டில் உள்ள கிரகங்களைக் கொண்டு ஒருவரது அதிர்ஷ்டம் எப்போது பிரகாசிக்கும் என்பதை கூற முடியும்.

எந்த வயதில் ஒருவரது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்?

* ஜோதிடத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் அதிர்ஷ்ட வீட்டில் குரு இருந்தால், அதாவது 9 ஆவது வீட்டில் குரு பகவான் இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டமானது 16 வயதில் பிரகாசிக்கும். இந்த 16 வயதில் இருந்து இவர்களின் வாழ்க்கை பிரகாசமாக, செழிப்பாக இருக்கும் மற்றும் வாழ்வில் பல முன்னேற்றங்களையும் காண்பார்கள்.

* ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரிய பகவான். இந்த சூரிய பகவான் ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபருக்கு 22 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்க்கையில் வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள்.

* ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் சந்திரன் இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டம் 24 வயதில் பிரகாசிக்கும். முக்கியமாக இந்த மாதிரியான ஜாதகத்தைக் கொண்டவர்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

* நவகிரகங்களில் சுக்கிரன் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட சுக்கிரன் 9 ஆவது வீட்டில் இருக்கும் போது சாதகமான பலன்கள் கிடைக்கும். அதுவும் ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் இருக்கும் சுக்கிரனால், அந்நபருக்கு 25 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த வயதில் இந்நபரின் கையில் செல்வம் அதிகம் சேரும், வெற்றிகள் குவியும்.

* ஜாதகத்தில் செவ்வாய் 9 ஆவது வீட்டில் இருந்தால், அது வெற்றியைக் கொண்டு வரும். அதுவும் இந்த மாதிரியான ஜாதகத்தைக் கொண்டவர்களுக்க 28 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மற்றும் நிலம், சொத்து போன்றவை அதிகம் சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

* ஒருவரது ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் புதன் இருந்தால், அந்நபரின் அதிர்ஷ்டம் 32 வயதில் பிரகாசிக்கும். மேலும் இத்தகையவர்கள் நிறைய படிப்பார்கள், நல்ல எழுத்தாளர்களாக இருப்பர். இது தவிர இவர்கள் ஜோதிடம், கணிதம், கல்வி போன்ற துறைகளில் நிறைய பணத்தையும், புகழையும் சம்பாதிப்பார்கள்.

* ஒருவரது பிறவி ஜாதகத்தில் 9 ஆவது வீட்டில் சனி இருந்தால், அந்நபருக்கு எப்படி சனி மெதுவாக நகருமோ, அதேப் போல் அதிர்ஷ்டமானது வழக்கத்தை விட மெதுவாகவே பிரகாசிக்கும். அதுவும் இந்நபருக்கு அதிர்ஷ்டம் 36 வயதில் தான் பிரகாசிக்கும். இத்தகையவர்களுக்கு வாழ்க்கையின் முதல் பாதியை விட இரண்டாவது பாதி மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக தொழிலில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியையும், செல்வத்தையும் பெற முடியும்.

* ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அல்லது இவற்றில் ஒரு கிரகம் 9 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபருக்கு அதிர்ஷ்டமானது 42 வயதில் தான் பிரகாசிக்கும். இந்த வயதில் இவர்களின் நிதி நிலை மேம்படும் மற்றும் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, October 26, 2023, 16:07 [IST]
Desktop Bottom Promotion