Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
நீங்க மேஷ ராசியா? அப்ப இந்த விஷயங்களை தெரியாம கூட செஞ்சுடாதீங்க..
Aries Zodiac Signs: ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் முதன்மையான ராசி தான் மேஷம். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், துணிச்சல், வலிமை ஆகியவற்றின் காரணி என்பதால், இந்த மேஷ ராசியைச் சேர்ந்தவர்களும் நல்ல துணிச்சலானவர்களாக, தைரியசாலிகளாக, தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பர். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.
சவால்களை எதிர்கொள்ளும் போது அச்சம் கொள்ளமாட்டார்கள். நல்ல திறமையானவர்கள். கடமைகளை தவறாமல் கடைப்பிடிப்பார்கள். புதிய அனுபவங்களைப் பெற விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் ஒருசில விஷயங்களை ஒருபோதும் செய்யக்கூடாது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

1. வெறுப்பு/பகைமையை வளர்ப்பது
பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். அதுவும் மற்றவர்களுடன் ஏதாவது பிரச்சனையாகி, யாராவது லேசாக மனம் புண்படும்படி நடந்து கொண்டாலோ அல்லது பேசினாலோ, அதை மனதில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் மோசமான குணம். இம்மாதிரியான குணம் உறவுகளுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே எது நடந்தாலும், அதை மனதளவில் எடுத்துக் கொள்ளாமல், அப்படியே மறந்துவிட்டு வாழ்க்கையை நோக்கி முன்னேற கற்றுக் கொள்ள வேண்டும்.
2. எச்சரிக்கைகளை புறக்கணிப்பது
மேஷ ராசிக்காரர்களிடம் உள்ள ஒரு மோசமான பழக்கம் எச்சரிக்கைகளை புறக்கணிப்பது. யாராவது அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தால், அதைக் கேட்காமல் ரிஸ்க்குகளை எடுத்துவிட்டு, பின் மனதளவில் வருத்தம் கொள்வார்கள். இப்படியான புறக்கணிக்கும் குணமானது உறவுகளிலும் பிரச்சனைகளை வரவழைக்கலாம். எனவே இப்படி எச்சரிக்கைகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. உள்ளுணர்வுகளை புறக்கணிப்பது
மேஷ ராசிக்காரர்களிடம் உள்ள ஒரு சிறப்பான குணங்களுள் ஒன்று வலுவான உள்ளுணர்வு. இதனால் தான் இவர்களால் சிக்கலான நேரங்களில் திறம்பட முடிவுகளை எடுக்க முடிகிறது. இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் இவர்கள் தங்கள் உள்ளுணர்வை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். எனவே வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் உள்ளுணர்வை நம்பத் தொடங்க வேண்டும்.
4. அதிக அழுத்தம் கொள்வது
மேஷ ராசிக்காரர்கள் அதிக ஆற்றல் மற்றும் உற்சாகம் கொண்டவர்கள் என்பதால், எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இப்படி எந்நேரமும் ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்வது, சில சமயங்களில் மன அழுத்தம், சோர்வு, கவனமின்மைக்கு வழிவகுக்கும். எனவே இப்படி அதிக அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க, வேலைகளை திட்டமிட்டு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
5. அவசர முடிவுகளை எடுப்பது
நல்ல முடிவுகளை எடுப்பது மற்றும் செயலில் கவனம் செலுத்துவது மேஷ ராசிக்காரர்களின் சிறப்பான குணாதிசயங்கள். இந்த குணங்கள் இவர்களை பல மோசமான சூழ்நிலைகளை கைக்கொடுக்கும். ஆயினும், சில நேரங்களில் ஒரு பிரச்சனைக்கு மற்றவர்களின் கருத்துக்களை கேட்காமல் அல்லது அப்பிரச்சனையைப் பற்றி தீவிரமாக யோசிக்காமல், அவசரமாக முடிவுகளை எடுப்பது பல இழப்புக்களை ஏற்படுத்தும். இப்படி யோசிக்காமல், பகுப்பாய்வு செய்யாமல் அவசர முடிவுகளை எடுப்பதை மேஷ ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications