Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்!
ஏப்ரல் மாசத்துல இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
April 2024 Monthly Finance Horoscope: ஏப்ரல் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படவுள்ளது. குறிப்பாக நிதி ரீதியாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதே சமயம் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனையால் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார்கள்.
உங்களுக்கு ஏப்ரல் மாதம் நிதி ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 2024 ஏப்ரல் மாதம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில் ஏப்ரல் மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது நிதி ரீதியாக முக்கியமானதாக இருக்கும். இம்மாதத்தில் வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். யோசிக்காமல் முதலீடு செய்தால், அவதிப்பட நேரிடும். வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும். மாதத்தின் நடுப்பகுதியில் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு இம்மாதம் லாபகரமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். தொழிலதிபராக இருந்து, வெளிநாட்டில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வருமானம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். எந்த ஒரு நிதி முடிவுகள் மற்றும் முதலீடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது பண வரவு சுமாராகத் தான் இருக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சற்று மோசமாக இருக்கும். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பணப் பிரச்சனையால் முக்கிய வேலைகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதம் நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கு குறுக்குவழிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இம்மாதம் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இதனால் உங்களின் கடன் பிரச்சனைகள் இம்மாதத்தில் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நிதி ரீதியாக ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். சிலர் புதிய வருமானத்தைப் பெறலாம். ஏதேனும் கடனை வாங்கியிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் யோசிக்காமல் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும் அதிகரிக்கும் செலவுகளால் பணத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். இம்மாதத்தில் முடிந்த வரை செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு கரையும் அளவில் செலவுகளை சந்திப்பீர்கள். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் ஏப்ரல் 20-க்கு பின் சற்று நிம்மதி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் யாரோ சொல்வதைக் கேட்டு முதலீடு செய்யாதீர்கள். முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்த பின் செய்யுங்கள். நிதி ரீதியாக மாதத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். மாதத்தின் நடுப்பகுதியில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கடன்களை அடைத்துவிடுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இம்மாதத்தில் சேமிப்பது கடினமாக இருக்கும். ஆனால் மாத இறுதியில் நிதி நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும். புதிய வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications