Latest Updates
-
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
ஏப்ரல் மாசம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
April 2024 Lucky Zodiac Signs: ஒவ்வொரு மாதத்தில் நுழையும் போதும், அந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். இதை ஜோதிடத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்களானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 02 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 04 ஆம் தேதி மேஷ ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். பின் ஏப்ரல் 09 ஆம் தேதி புதன் வக்ர நிலையில் மீன ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார். அதன் பின் சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி மேஷ ராசிக்கும், ஏப்ரல் 19 ஆம் தேதி புதன் மீன ராசியில் உதயமாகவும் உள்ளார். இறுதியாக ஏப்ரல் 24 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி ஏப்ரல் மாதத்தில் புதனின் நிலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுவதால், பல ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பலவிதமான மாற்றங்களைக் காண்பார்கள். அதோடு மேஷ ராசியில் பல கிரகங்கள் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கவுள்ளன. இப்படி பல கிரகங்களின் நிலைகளில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏப்ரல் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதோடு நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். சிலருக்கு திடீரென்று பணம் தேடி வரும். நீண்ட நாட்களாக சிக்கிய பணமும் கைக்கு கிடைக்கும். இம்மாதத்தில் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும். இம்மாதத்தில் செலவுகள் குறைந்து, நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், புதிய வேலை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். அத்துடன் சம்பள உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்து வந்தால், எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் சூப்பராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆனால் எந்த பிரச்சனைகளிலும் தலையிடாதீர்கள். சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். இப்படி இருந்தால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். புதிய தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இந்த மாதத்தில் கைக்கு வந்து சேரும். நிதி ரீதியாக இம்மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். முக்கியமாக இந்த மாதத்தில் தந்தையின் ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications