Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
April Horoscope 2023: ஏப்ரல் மாசம் இந்த ராசிக்காரங்களுக்கு அமோகமா இருக்கப் போகுது.. உங்க ராசி என்ன?
April Horoscope 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

கீழே 12 ராசிக்காரர்களும் ஏப்ரல் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஏப்ரல் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் உங்களுக்கு சுமாராக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு மற்றும் சவால்களை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் இணக்கம் குறையும். மாதத்தின் முதல் பாதி காதலிப்பவர்களுக்கு சாதகமாக இருக்காது.
திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற முடியாமல் போகலாம். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகள் மற்றும் தலைவலி பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களில் தாமதங்களை சந்திக்க நேரிடும். வெற்றி பெற நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சற்று கடினமாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதி அருமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.
திருமணமான தம்பதிகளுக்கு ரொமான்டிக்கான மாதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். நிதி ரீதியாக, மாதத்தின் முதல் பாதியில் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் நல பிரச்சனையால், மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதியில் தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்யும் வாய்ப்புக்கள் அமையும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும். குடும்ப உறுப்பினர்களிடையே சில குழப்பங்கள் மற்றும் தவறான புரிதல்கள் இருக்கலாம்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறலாம். நிதி ரீதியாக, தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்காது. பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். வணிகர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல்களை சந்திக்கலாம். சனி சாதகமற்ற நிலையில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.
ஈகோ பிரச்சினைகள் மற்றும் தவறான தகவல்தொடர்பு காரணமாக காதலர்களிடையே பிரச்சனைகள் வரலாம். திட்டமிட்டு செலவு அல்லது முதலீடு செய்யாவிட்டால், நிதி இழப்புக்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முதுகு வலி, கால் வலி, பல் வலியால் அவதிப்படக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியானது தொழில் ரீதியாக வெற்றிகரமாகவும், முன்னேற்றத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும். கடின உழைப்பினால் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
மாதத்தின் முதல் பாதியில் குடும்ப சண்டைகள் ஏற்படலாம். ஆனால் இரண்டாம் பாதி சுமூகமாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த மாதமானது நிறைய பணத்தை சம்பாதிக்கவும், வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறவும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடு செய்ய நினைத்தால், அதை ஏப்ரல் 15-க்கு பிறகு செய்ய அறிவுறத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக, கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் கிரகங்களின் நிலைகளால் பல சவால்களுக்கு பின் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே தொடர்ந்து தவறான புரிதல்கள் இருக்கும்.
திருமணமாகாதவர்கள் திருமணம் செய்ய இம்மாதம் சிறந்தது அல்ல. அதேப்போல் திருமணமான தம்பதிகள் அடிக்கடி சண்டைகளை போடக்கூடும். நிதி ரீரியாக, ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும், படிப்படியாக வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக சவால்கள் மற்றும் தடைகள் நிறைந்த மாதமாக இருக்கும். ஆனால் மாத இறுதியில் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சவுகள் அதிகரிக்கும்.
திருமணமானவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும். நிதி ரீதியாக, வணிகர்கள் இம்மாதத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முதலீடு செய்ய நினைத்தால், இரண்டாம் பாதியில் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்றுக் கோளாறுகள், தலைவலி போன்றவை ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமற்றதாக இருக்கும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
திருமணம் செய்ய நினைத்தால், அதை இம்மாதத்தில் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகளின் பிணைப்பு பலவீனமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதியானது தொழில் ரீதியாக மிகவும் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கலாம். மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திக்கலாம். நிலையான வருமானம் இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்வில் சவால்களை சந்திக்கலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஏழரை சனி நடந்து வருவதால், ஏப்ரல் மாதமானது சற்று கலவையான பலன்களைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். குருவின் அருளால் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இம்மாதத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடும். சொத்து சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படும்.
திருமணமான தம்பதிகளுக்கு இடையே தவறான புரிதல்கள் இருக்கலாம். நிதி ரீதியாக, இம்மாதத்தில் தேவையில்லாத செலவுகளை சந்திக்க நேரிடும் மற்றும் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம், செரிமான பிரச்சனைகளை சந்திக்கலாம். தாயாரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழில் வாழ்க்கையானது சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண முடியாமல் போகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியாமல் போகலாம். குடும்பத்தில் சண்டைகள், வாக்குவாதங்களை அதிகம் சந்திக்க நேரிடும்.
திருமணமானவர்களிடையே பிரச்சனைகள் வரலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடும். நிதி ரீதியாக, ஏப்ரல் மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்க கடினமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஏற்கனவே ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால், ஏப்ரல் மாதத்தில் தொழில் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கலாம். வேலைப்பளு மற்றும் சவால்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திக்கலாம். குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் வரலாம்.
இம்மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதே சமயம் வீட்டு செலவுகளும் அதிகரிக்கும். பங்குச் சந்தையின் முதலீடு செய்தால், கணிசமான லாபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு வலி, இருமல் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











