Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
முடிவுக்கு வந்த கொடிய அங்காரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Angarak Yoga Ends: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி, அவை மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஜூன் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
அதற்கு முன் மீன ராசியில் பயணித்து வந்தார். அப்போது அந்த ராசியில் நிழல் கிரகமான ராகுவும் பயணித்து வந்தார். இதனால் மீன ராசியில் ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவானது. ஆனால் ஜூன் 01 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் நுழைந்ததால் கொடிய அங்காரக யோகம் முடிவுக்கு வந்தது.

ஜோதிடத்தில் அங்காரக யோகமானது ஒருவரது வாழ்க்கையில் பல இன்னல்கள் மற்றும் சிரமங்களை ஏற்படுத்தும். நிறைய கோபங்களை வரவழைத்து, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். தற்போது இந்த யோகம் முடிவுக்கு வந்ததால், இதுவரைபிரச்சனைகளை சந்தித்து வந்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
அங்காரக யோகம் முடிவுக்கு வந்ததால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளும் குறையும். தொழில் ரீதியாக எதிர்பாரத்த பலன் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்துடன் வெற்றியையும் பெறுவார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
அங்காரக யோகம் முடிவுக்கு வந்ததால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.
கடகம்
அங்காரக யோகம் முடிவுக்கு வந்ததால் கடக ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியாக, சிறப்பாக இருக்கும்.சொந்த வியாபாரம் செய்பவர்கள் லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், பணம் மற்றும் சொத்து சம்பந்தமான திட்டங்களை கொண்டிருந்தால், அது இனிமேல் வெற்றிகரமாக நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications